தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

1 hour before
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

கொல்கத்தா: துர்காபூஜை பந்தல்நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

கொல்கத்தா,அக்.17-வடக்கு கொல்கத்தாவில் உள்ள ‘சோர் பாகான்’ பகுதியில் சனிக்கிழமை இரவு (அக்.17)ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள ‘சோர் பாகான்’ பகுதியில் துர்கா பூஜை நடந்தது. அதற்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது, பந்தலுக்குள் இருந்தவர்கள் வெளியே வராததாலும், வெளியே இருந்தவர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்து மற்றும் நெரிசலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பலர் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கானபுதிய ஓஎஸ் 7 அறிமுகம்

சென்னை, அக்.17-ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மேலும் வேகமாகவும் எளிமையாகவும் மாற்றும் வகையில், ‘விவோ இந்தியா’ நிறுவனம் தனது புதிய ‘ஒரிஜின் ஓஎஸ் 7’ ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எளிமையான பயன்பாடு, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை எளிதில் இணைக்கும் வசதி ஆகிய மூன்றை முக்கிய அம்சங்களாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘Origin Smooth Engine’, ‘Fluid Motion’ மற்றும் ‘Spring Animation’ தொழில் நுட்பங்கள், போனின் தொடுதிரை இயக்கத்தை மிகவும் விரை

வாகவும் இயல்பாகவும் மாற்றுகின்றன என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

75% பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ததில்லை: ஆய்வில் தகவல்

சென்னை, அக்.17-சென்னையில் 75% பெண்கள் இது வரை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்த தில்லை என ஐஐடி சென்னை மற்றும் எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அக்டோபர் மார்பகப் புற்றுநோய் விழிப்பு ணர்வு மாதத்தையொட்டி வெளியான இந்த ஆய்வில், நோய் அறிகுறிகள் இல்லாத தால் பலர் பரிசோதனை செய்யாதது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகமாக பரவி வருவதால், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான பெண்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், காப்பீடு மற்றும் உரிய வசதிகளுடன் ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது சிகிச்சை சுமையைக் குறைக்கும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை, அக்.17-இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் வரும் அக்டோபர் 31-க்குள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அவர், இணையதள வசதியற்ற பள்ளிகளுக்கு பி.எஸ்.என்.எல் இணைப்பு வழங்க ரூ. 3.54 லட்சம் ஒதுக்கி ஒப்புதல் அளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.