தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

1 hour before
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை, அக்.16-சென்னையில் ஆபரணத் தங்கமான 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,08,120-க்கும் விற்பனையானது. தூய்மையான ஒரு கிராம் ரூ.14,744 என நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு சவரன் ரூ.1,17,952 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று, 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,115-க்கும், ஒரு சவரன் ரூ.88,920-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்வு நிர்வாக இயக்குநர் பினோத் குமார் தகவல்

சென்னை, அக்.16-இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் பினோத் குமார் தெரிவித்துள்ளார்.

2026-27-ம் நிதி ஆண்டின் இந்தியன் வங்கியின் முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (ஜூன்) ரூ.2,973 கோடியாக இருந்தது. தற்போது நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 10.09 சதவீதம் அதிகரித்து உள்ளது. வங்கியின் செயல்திறன். நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.4,770 கோடியில் இருந்து ரூ.5.557 கோடியாகவும் நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியில் இருந்து ரூ.7,435 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் பரவலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மொத்த வணிகம் 13.66 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்த வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 289 கோடியில் இருந்து ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 578 கோடி என்ற அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 720 கோடி வரை முன்னுரிமை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஐ.ஐ.பி.எப். அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மறைமலைநகர் விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விளக்கம்

மறைமலைநகர், அக்.16-ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்காக மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குப் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மைதானத்தில் தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருவதாகவும், பேருந்துகள் இயக்கத்தால் மைதானம் சேதமடைந்து பயிற்சி பாதிக்கப்படும் என்பதால் அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, அப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக போக்கு வரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டுமே இந்த மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாகப் பயன்படுத்தப்படும் என்றும், மற்ற நாட்களில் இங்குப் பேருந்துகள் நிறுத்தப்படாது என்றும் அமைச்சர்விளக்க மளித்தார். அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள்மற்றும் பெற்றோர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.