மாற்று இடம் இறுதி செய்யும் வரை எம்.சி.ரோட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
6 hours before

மாற்று இடம் இறுதி செய்யும் வரை எம்.சி.ரோட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்

சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, நவ. 28-மாற்று இடம் இறுதி செய்யும் வரை எம்.சி. ரோட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் வடக்கு வட்டார துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

அதில், ராயபுரம் எம்.சி. ரோடு வியாபாரிகள் கடந்த 25ஆம் தேதி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்கள் அளித்துள்ளனர். அதனடிப்படையில் நகர விற்பனைக்குழு கூட்டத்தில் 7 இடங்களை மாற்று இட மாக அறிவித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆனால் தற்போது அறிவித்துள்ள 7 இடங்க ளும் வியாபாரம் செய்யும் இடமாக, மக்கள் வந்து செல்லும் இடமாக இல்லை.எனவே கோயில் எதிரில் தற்போது பயன்பாட்டில் இல்லாத குளத்தை சுற்றி உள்ள இடத்திலும், மெட்ரோ வாட்டர் பக்கத்தில் உள்ள போக்குவரத்திற்கு பாதிப்பில்லாத இடங்களை ஒதுக்கி தந்தால் வியாபாரம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் கடந்த 21ஆம் தேதியில் இருந்து வியாபாரிகள் தொழில் செய்ய முடியாததால் தங்களின் வாழ்வா தரத்தை இழந்து அவதிப்படு கின்றனர். எனவே கிறித்து மஸ், பொங்கல் விழா வருவதால் மாற்று இடம் இறுதி செய்யப்படும் வரை தற்போதுள்ள அதே இடத்தில் 4x6அடி என்ற அளவில் கடை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

செயற் பொறியாளர் நக்கீரன் உடனடியாக மாற்று இடம் ஏற்பாடு செய்ய ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதில் செயலாளர் டி.வெங்கட், சி.பி.எம் பகுதி செயலாளர் எஸ்.பவானி, நகர விற்பனை குழு உறுப்பினர் கே.பலராமன், சங்க நிர்வாகிகள் மணி மேகலை, அருள், சீமான் ஆகியோர் உடன் இருந்தனர்.