திருமயிலை முதல் போட்கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணி துவங்கியது
2 hours before

திருமயிலை முதல் போட்கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணி துவங்கியது

சென்னை, ஜூலை 31-சென்னை மெட்ரோ ரயில் திட்டம்கட்டம்-2 வழித்தடம் 4-ல், திருமயிலை முதல் போட் கிளப் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பகுதியில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் “கழுகு” 2,274 மீட்டர் நீளத்திற்குச் சுரங்கம்தோண்டும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. திருமயிலை நிலையத்திலிருந்து போட் கிளப் நிலையம் வரையிலான இந்த சுரங்கப்பாதை பகுதி மெட்ரோ ரயில்இரண்டாம் கட்ட அமைப்பின் மிக

முக்கியமான சுரங்கப்பாதை பகுதிகளில் ஒன்றாகும். மெட்ரோ ரயில் திட்டத்தின் இந்தசுரங்கப்பாதை பணியில், ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் மெட்ரோரயில் நிலையங்கள் வழியாக “டிராக்-த்ரூ” முறையில், இயந்திரத்தைப் பிரிக்காமலேயே நேரடியாக அடுத்தகட்டப் பணிக்குக் இந்த சுரங்கம்தோண்டும் இயந்திரம் கொண்டு செல்லப்படும். மேலும், ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் நிலையங்களுக்கு இடையே சுமார் 586மீட்டர் நீளத்திற்கு இரண்டு சுரங்கப்பாதைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைவது இதன் முக்கிய பொறியியல் சிறப்பம்சமாகும். இத்தகைய கடினமான சவால்களைக் கடந்து இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் போட்கிளப் நிலையத்தை நோக்கிப் சுரங்கம்அமைக்கும் பணியை தொடரும்.இந்தப் பாறை மற்றும் மண்அமைப்புகளில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக, இந்த சுரங்கம் தோண்டும் பணி பல்வேறு பொறியியல் சவால்களைக் கொண்டதாக உள்ளது. மேல்பகுதியில் மென்மையான களிமண் அடுக்குகளும், அடிப்பகுதியில் கடினமான பாறைகளும்கலந்த சூழல் இதில் நிலவுகிறது. எனவே, நிலத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், தடம் மாறாமல் துல்லியமாகச் சுரங்கம் தோண்டவும்தொடர் கண்காணிப்புடன் கூடிய மிகநுணுக்கமான திட்டமிடல் செயல்படுத்தப்படுகிறது.இந்த சவால்களை எதிர்கொள்ள, மெட்ரோ ரயில் நிறுவனம் திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க பொறியாளர்கள் குழுவை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. உயர்தர தொழில்நுட்ப அமைப்புகள், கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் விரிவான பாதுகாப்பு நடைமுறைகளுடன், சுரங்கம் தோண்டும் பணியின் ஒவ்வொரு கட்டமும் பாதுகாப்பு, தரம் மற்றும் சிறந்த செயல்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் இந்த சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தமைல்கல் மூலம், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கும், நகரின் நிலையான போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும், உலகத்தரம் வாய்ந்த சுரங்கப்பாதை தீர்வுகளை வழங்குவதில் தனது உறுதியான ஈடுபாட்டை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.