முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

2 hours before
சென்னை விரைவு செய்திகள்

பார்வை மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் இயக்கம்

திருவண்ணாமலை, அக்.15- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம்சார்பில், பார்வை மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை கள் குறித்து வெண்கோல் தினமான வியாழன் அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கும் இயக்கம் நடை பெற்றது.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ரமேஷ்பாபு, சிவாஜி, சத்யா உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.மாற்று த்திறனாளிக ளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டில் 1 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவேண்டும்,

பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு ஜிபிஎஸ் வைப்ரேஷன் ஸ்டிக் வழங்க வேண்டும், பார்வையற்றமாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.போக்குவரத்துச் சாலைகளில் உள்ள சிக்னல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி அமைக்க வேண்டும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழன் அன்று திரு வண்ணாமலைமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்தது!

சென்னை,அக்.15-சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் ஆப ரணத் தங்கம் ரூ. 75 குறைந்து ரூ. 13,515-க்கும், ஒரு சவரன் ரூ. 1,08,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 2,920 சரிந்துள்ளது. இதேபோல், ஒரு வாரத்திற்குப் பிறகு வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 240-க்கு விற்பனையானது.

Share
FacebookXWhatsAppTelegram