சென்னை விரைவு செய்திகள்
1 hour before

சென்னை விரைவு செய்திகள்

வியாபாரியை கடத்திய இளைஞர் கைது

சென்னை, செப். 28-ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் (27). இவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரை அமைந்த கரையை சேர்ந்த சேதுராமனும் (24), அவரது நண்பர்க ளும் கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த அசோக், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சேதுராமனை கைது செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

விழுப்புரம், செப்.28-திண்டிவனம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி கலையரசி (வயது 38). இவர்தற்போது திண்டிவனம் சுரேஷ் பாண்டியன் நகரில் வசித்துவருகிறார். இந்நிலையில் கலையரசி, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி யில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட் டுக்கு திரும்பிகொண்டிருந்தார். திண்டிவனம் மரக்காணம் ரோடு, நகராட்சி சுடு காடு அருகே நடந்து சென்ற போது அவ்வழியேமோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கலையரசி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டுதப்பியோடிவிட்டனர்.இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தங்கம் விலை குறைவு

சென்னை, செப். 28-சென்னையில்ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராம் ரூ.13,766-க்கும், 10 கிராம் (ஒரு பவுன் அல்ல, 10 கிராமிற்கு)ரூ.1,37,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,017-க்கும், 10 கிராம்ரூ.1,50,170-க்கும் விற்பனையானது.