சென்னை விரைவு செய்திகள்
2 hours before

சென்னை விரைவு செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

கடலூர், நவ.27-கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பண்ருட்டி அடுத்த வீரப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி விஜயா (60). இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் விஜயராகவன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் இரும்பு ராடால் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளை

யடித்துச் சென்றனர்.

இந்நிலையில், வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து விஜயா வுக்கும், புதுப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசா ரணை நடத்தினர். மேலும், வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, நவ. 27-சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழ மையன்று கிராமுக்கு ரூ. 230 உயர்ந்துரூ. 11,770-க்கும், சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்துரூ. 94,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை யைப் பொறுத்தவரை, கிரா முக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.170-க்கும், கிலோ பார் வெள்ளி ரூ. 5,000உயர்ந்து ரூ. 1,70,000-க்கும் விற்பனையானது.

கூவத்தூரில் சமுதாய வளைகாப்பு

செய்யூர், நவ.27-செங்கல்பட்டு மாவட் டம், கூவத்தூரில் தனியார்மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செய்யூர் தொகுதி எம்எல்ஏ. ராஜசேகர், மாநிலங்களவை உறுப்பினர் தனபால் பங்கேற்றனர். மேலும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் லத்தூர், சித்தாமூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் கிராமப்பகுதிகளை சேர்ந்த சுமார் 250 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அரசு சார்பில் வழங்கப்பட்ட சீர்வரிசையான புடவை உள்பட பல்வேறு பொருட்களை வழங்கினர்.

புதிய தாழ்வு மண்டலத்திற்கு வாய்ப்பு

சென்னை, நவ.27- தெற்கு அந்தமான் கடலில் நவ.29 ஆம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகி, டிச.2 முதல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். நவ.28 அன்று தேனி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். டிச. 2 வரை சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் வெற்றி: வழக்கு தள்ளுபடி

சென்னை, நவ.27-போடிநாயக்கனூரில் திமுக எம்.எல்.ஏ. ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கை, ஓபிஎஸ் தரப்புக் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரியர் சிறப்புத் தேர்வு

சென்னை, நவ.27- அண்ணா பல்கலைக்கழ கப் பொறியியல் கல்லூரிகளில் 2008 முதல் பயின்று, அரியர் காரணமாகப் பட்டம் பெற முடியாதவர்களுக்குச் சிறப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காலமான ஏழு ஆண்டுகளுக்குள் (பாலி டெக்னிக் முடித்துச் சேர்ந்தோருக்கு 6ஆண்டுகள்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு இது நல்வாய்ப்பாகும்.

உதயநிதி பிறந்த நாள்:தலைவர்கள் வாழ்த்து

சென்னை, நவ.27- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டிப் பெற்றோர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சி மூத்தோருக்குப் பொற்கிழிகள் வழங்கினார்.

40 ஆண்டுகளாக வசித்த வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுராந்தகம், நவ. 27-செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி மண்டபத் தெருவில் பொதுப்பணித்துறை கால்வாய் நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளாக தனசேகர் மற்றும் மனோகர் ஆகியோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வீடுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் சென்றபோது, முன் அறிவிப்பு வழங்கப்படாததைக் கண்டித்து குடியிருப்பாளர்கள் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாற்று இடம் கிடைத்ததும் வீட்டை காலி செய்வதாக அவர்கள் தெரிவித்ததால், நகராட்சி நிர்வாகம் ஓரிரு நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

மேடவாக்கம் ஊராட்சியில்தொழிலாளர் சங்கம் உதயம்

சென்னை, நவ. 27 -சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் புதிய கிளை மேடவாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உதயமாகி உள்ளது.இந்தகிளையின் கொடியேற்றம் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா வெள்ளியன்று (நவ.27) ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் இ.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்க கொடியை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் ஏற்றினார். பெயர்ப்பலகையை மூத்த தலைவர் எஸ்.அப்பனு திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சி.முகேசன், செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர் ஆர்.முருகன், கிளைச் செயலாளர் இ.ரவி, பொருளாளர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.

ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபான லாரி கவிழ்ந்து விபத்து

ஆவடி, நவ.27-ஆவடி அருகே வெளிவட்டச் சாலையில் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் அரசு மதுபானக் கிடங்கில் இருந்து ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரி, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ஆவடி அடுத்த மோரை பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சதீஷ் (38) உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்தில் மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறிய நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடையாத பாட்டில்களைப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி மற்றும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், கூட்டத்தை அப்புறப்படுத்தி மதுபானங்களைப் பாதுகாத்தனர். காயமடைந்த 5 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரட்டூரில் 3,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞர் கைது

அம்பத்தூர், நவ.27-அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரயில் நிலையம் வழியாக போதை மாத்திரைகள் கடத்தி வந்த அஜித்குமார் (26) என்பவரை மடக்கிச் சோதனையிட்டதில், அவரது பையில் 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், வாட்ஸ்அப் குழு அமைத்து அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்; மேலும் இவருக்கு உடந்தையாக இருந்தவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.