முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

2 hours before
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

காலமானார்

சென்னை, செப். 20-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் குமரவேல் தாயார் பி.தனலட்சுமி (60) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (செப். 19) காலமானார்.ஆர் கே நகர் 41ஆவது வட்டம் கண்ணகி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பகுதிச்செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் சரவணன், விஜய்,ஜெயன் திருமுருகன், ஜோதிபாசு, முருகன், சரவணன், கோவிந்த் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் ஞாயிறன்று (செப். 20) மாலை மூலக்கொத்தளத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம்செய்யப்பட்டது.

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

சென்னை, செப். 20-மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - கமலா கணேசன் (கமலாம்பாள்) தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி (72) உடல்நலக்குறைவால்ஞாயிறன்று அதிகாலை சென்னையில் காலமானார்.அஞ்சலிக்காக அவரது உடல் வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது; திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சி

கவிஞர் தமிழ்ஒளி 103வது பிறந்த நாள் விழா ஆய்வரங்கம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரைஆய்வாளர்கள் அறை, மில்லர் நினைவு நூலகம், சென்னைக் கிருஸ்த்துவக் கல்லூரி, தாம்பரம், சென்னை - 600 059. தலைமை முனைவர் து. மேஷாக், “கவிஞர் தமிழ்ஒளியின்அறிவியல் பாய்ச்சல்” எனும் பொருண்மையில் ஆய்வுரை முனைவர் கு. இரவிக்குமார்.

Share
FacebookXWhatsAppTelegram