சென்னை துறைமுகத்திலிருந்து கனிம ஏற்றுமதியில் புதிய சாதனை!
2 hours before
<p><strong>சென்னை துறைமுகத்திலிருந்து கனிம ஏற்றுமதியில் புதிய சாதனை!</strong></p><p>சென்னை, ஜூலை 31 -சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் வியாழன்று (ஜூலை 30) மொத்தமாக சரக்குகளை கையாளுதலில்பல்வேறு புதிய மைல்கற்களை எட்டிச் சாதனை படைத்துள்ளது.ஜவஹர் டாக்-2ல் நிறுத்தப்பட்டிருந்த ‘எம்.வி. நபீசா ஜஹான்’ என்ற கப்பல் மூலம் ஒரே நாளில் 46,000 மெட்ரிக் டன் பேரைட்ஸ் கனிமம் (இதுபெட்ரோலியக் கிணறுகள் தோண்டுவதற்கும், ரசாயனத் தொழில்களுக்கும் பயன்படும் ஒரு கனமான தாதுப்பொருளாகும்) ஏற்றுமதி செய்யப்பட்டுப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2022 மே31 அன்று ‘எம்.வி. கூஸ்டா’ கப்பல் மூலம் 45,200 மெட்ரிக் டன் கையாண்டதே சாதனையாக இருந்த நிலையில்,தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமன்றி, ஜவஹர் டாக்-IV-ல் ‘எம்.வி. அகியா சாரிஸ்’ கப்பல் மூலம் 13,208 மெட்ரிக் டன் ‘பிக் அயர்ன்’ எனப்படும் வார்ப்பு இரும்பு, முதன்முறையாகப் புதிய சரக்குக் காரணியாகக் கையாளப்பட்டது. தற்போதுள்ளஉள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘பி.எல். டிரான்ஸ்போர்ட்’ நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ள 3புதிய நகரும் துறைமுகக் கிரேன்களை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சச்சின் எஸ். குர்வேதிறந்து வைத்தார்.</p>
