தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

yesterday
சென்னை விரைவு செய்திகள்

எண்ணூர் - மாமல்லபுரம் இடையே வாட்டர் மெட்ரோ திட்ட ஆய்வு தொடக்கம்

சென்னை, ஆக. 14-பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை நடை முறைப்படுத்துவது குறித்து சென்னை பெருநகர மெட்ரோ ரயில் நிறுவனம் சாத்தியக்கூறு ஆய்வைத் தொடங்கியுள்ளது.

இதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்டு, அதன்பிறகு அறிக்கை தயாரிக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுப்பதே மிகப் பெரிய சவாலாக உள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும், கால்வாய் சீரமைப்பு, திட்டச் செலவு, நிதி மாதிரி, மற்றும் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்தும் இந்த ஆய்வில்

முழுமையாக ஆராயப் படும். அனைத்துப் பணி களும் முடிந்த பிறகு இந்த விரிவான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகளால் 1 கோடி லிட்டர் எரிபொருள் சேமிப்பு

சென்னை, ஆக. 14-சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகராட்சிப் போக்குவரத்துக் கழகத்தின் மின் பேருந்துகள் 3 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளன. இதன் மூலம் ஒரு கோடி லிட்டருக்கும் அதிகமான டீசல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழுலுக்கு உகந்த

தாக போக்குவரத்து மாதிரி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மின் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், வெறும் 14 மாத காலத்திற்குள் சுவிட்ச் மொபிலிட்டி என்ற தனியார் நிறு

வனத்தின் மூலம் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் முதல் கட்டமாக 120 மின் பேருந்துகள் மற்றும் மின்னூட்டுதல் முனையம் தொடங்கப்பட்டதை அடுத்து, தற்போது வியாசர்பாடியில் தொகைப் பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பட்டறை மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய ஐந்து பணிமனைகள் மூலம் மொத்தம் 625 மின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் டி. மோகன் கூறுகையில், ஒரு கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டதன் மூலம் சுமார் 25,000 மெட்ரிக் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 15 லட்சம் மரங்கள் நட்டதற்குச் சமமான சுற்றுச்சூழல் நன்மையைத் தரும் பயன்பாட்டுக்கு இணையானது.

இதன் தொடர்ச்சியாக, 2026–27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் 1,000 குளிர்ந்தூட்டப்பட்ட மின் பேருந்துகளை வாங்குவதற்கு மாநில அரசு திட்ட மிட்டுள்ளது. எதிர்காலத்தில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக மொத்தம் 3,000 குளிர்சாதன மின் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் மின் வாகனச் சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களுக்கும் மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி, ஆக. 14- தேன்கோட்டை அருகே பெட்டமுகிலாலம் பகுதியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து தனியாக நடந்து சென்ற சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, கிருஷ்ணகிரி அரசு

மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்திவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு மாதா கோவில் தெருவை விற்பனை மண்டலமாக அறிவிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, ஆக. 14-சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்கு உட்பட்ட மேற்கு மாதா கோயில் தெருவை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சென்னை மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் வடக்கு வட்டார துணை ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில்,

மேற்கு மாதா கோயில் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர நடைபாதையில் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 50ஆவது வட்டம் உதவிப் பொறியாளர் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறி 11.8.2026 அன்று யாரும் கடை போட கூடாது என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

கடைகள் போடும் இடத்தில் எந்தவித பேருந்து போக்குவரத்தும் இல்லை. சுமார் 70 அடிக்குமேல் அகலமானசாலையாக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லாத இடமாக இருப்பதால் வியாபாரிகள் கடை போடுவதால்எந்தவித இடையூறும் இருக்காது என்பதே உண்மை.

எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அந்த இடத்தை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆணையர் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்.

நகர விற்பனை குழு உறுப்பினர் கே.பலராமன், சங்கத்தின் தலைவர் தனபால், செயலாளர் யாஸ்மின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.