ஓவேலியில் முதன்மை வன பாதுகாவலர் ஆய்வு!
8 hours before

ஓவேலியில் முதன்மை வன பாதுகாவலர் ஆய்வு!

கூடலூர், செப்.3-ஓவேலி லாரஸ்டன் பகுதியில் 13 ஆவது நாளாக ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதன்மை வன உயிரியல் பாதுகாப்பு அலுவலர் ராகேஷ் குமார் டோக்ரா அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த மாதம் இருவரை புலி வேட்டையாடியது.இதையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புதனன்று ஓவேலி லாரஸ்டன் வந்த வன உயிரியல் பாதுகாப்பு அலுவலர் ராகேஷ் குமார் டோக்ரா,வனத்துறை அதிகாரிகளிடம் புலி நடமாட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

புலி நடமாட்டம் இருக்கக்கூடிய முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள13 கூண்டுகளில் மாட்டிறைச்சி இரையாக வைக்கப்பட்டுள்ளது.

பாரம் குப்பைக் கிடங்கு மற்றும் திரிசந்திப்பு பகுதிகளில் உள்ள பெரிய கூண்டுகளில் மனித உருவ பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதுவரை புலி எந்தக் கூண்டிலும் சிக்கவில்லை. புலி வேறு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அண்டை வனக்கோட்டங்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன், சில்வர் கிளவுட் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரைத்தள தேடுதல் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.