சின்னசேலம் - கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில் பாதை பணிகள் தீவிரம் கள்ளக்குறிச்சி மக்களுக்கு வரப்பிரசாதம்
11 Oct 2026, 1:26 am

சின்னசேலம் - கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில் பாதை பணிகள் தீவிரம் கள்ளக்குறிச்சி மக்களுக்கு வரப்பிரசாதம்

கள்ளக்குறிச்சி,அக்.10-கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்ன சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை 11 கிராமங்கள் வழியாக 16.2 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.185.01 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் 2 பெரிய பாலங்கள், 23 சிறிய பாலங்கள் மற்றும் 9 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன. தண்ட வாளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதி மற்றும் எம்.ஆர்.என். நகர், பொற்படாக்குறிச்சி பகுதி களில் ரயில் நிலையம் மற்றும் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய விளைபொருட்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வது எளி தாகும். மேலும் பயண நேரம் சுமார் 70 கிலோ மீட்டர் வரை குறைவதுடன், 2 மணி நேரம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.