முந்தய பக்கம்

சிஐடியு வர்ணம் பூசுவோர் சங்கம் துவக்கம்

16 hours before
சிஐடியு வர்ணம் பூசுவோர் சங்கம் துவக்கம்

சிஐடியு வர்ணம் பூசுவோர் சங்கம் துவக்கம்

உதகை, ஆக.10-கோத்தகிரியில் சிஐடியு வர்ணம் பூசுவோர் சங்கம் துவங்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில் சிஐடியு பெயிண்டர் (வர்ணம் பூசுவோர்) சங்கம் துவக்க விழா, கோத்தகிரி எடசேரி ஹாலில் தியாகு தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத் துவக்கவுரையாற்றினார். எலக்ட்ரிசன் யூனியன் பொறுப்பாளர் மணிகண்டன், சிவா, போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல துணைத்தலைவர் சாமிநாதன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் மகேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இக்கூட்டத்தில், முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். வர்ணம் பூசும் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலமாக பாதுகாப்பு உபகரணங்கள்வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக தியாகு, செயலாளராக ஆர்.மகேஷ்,பொருளாளராக குணசேகரன் உட்பட 25 பேர் கொண்ட புதிய கமிட்டிதேர்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram