சென்னை விமான நிலையம் நிர்வாகம் தனியாருக்கு மாற்ற முதலமைச்சர் கடிதம்?
yesterday

சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, தற்போதைய நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி தனியார் நிறுவனத்திடம் விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைக்கக் கோரி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தி ஹிந்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சென்னை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றுவதற்கு ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிரதமர் மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தொழில்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டியதுடன், மாநிலத்தின் தொழில் மற்றும் வர்த்தகச் சூழலை ஆதரிக்க சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவது முக்கியம் என்றும் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது செயல்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறதாகவும், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியமான இடங்களாக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளை மாநில அரசு தேர்வு செய்துள்ளது.

எனினும், புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இடைக்காலத்தில் சென்னை விமான நிலையத்தில் மேம்பாடுகளை மேற்கொள்ளவும், அதன் நிர்வாகத்தை மாற்றவும் மாநில அரசு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக, இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது,

“சென்னை விமான நிலையம் குறித்து ஒரு முக்கிய கவலை, இந்த செய்தியைப் படித்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது.

சில வாரங்களுக்கு முன்புதான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போதைய சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவது — டெர்மினல் 5 உட்பட — மற்றும் கூடுதல் நிலங்களைப் பெற்று அதன் capacity-ஐ உயர்த்துவது குறித்து அறிவிப்புகள் வந்தன. ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டமன்றத்தில், டெர்மினல் 3 மற்றும் முன்மொழியப்பட்ட டெர்மினல் 5 மூலம் சென்னை விமான நிலையத்தின் capacity 55 million passengers ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இப்போது AAI-க்கு பதிலாக வேறு operator-ஐ கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது.

இதில் சில அடிப்படை கேள்விகள் எழுகின்றன:

1. சென்னை விமான நிலையமே நீண்ட காலத்திற்கு முக்கிய விமான நிலையமாக இருக்கப்போகிறது என்றால் — அதன் operation-ஐ மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

2. Private operator-ஐ கொண்டு வருவது என்றால், Terminal 5 உள்ளிட்ட expansion-ஐ அரசு/AAI செய்து, பின்னர் அதை private operator-க்கு ஒப்படைக்கப் போகிறோமா?

3. அல்லது Chennai-க்கு இன்னொரு மாற்று இடத்தில் புதிய airport உருவாக்கப் போகிறோம் என்றால், தற்போதைய airport-ஐ இப்போது ஏன் நீண்டகால operating model-ல் மாற்ற வேண்டும்?

இரண்டுமே தனித்தனியாக நியாயமான முடிவுகளாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு இடையிலான நீண்டகால திட்டம் தெளிவாக இருக்க வேண்டும்.

ஏனெனில், ஒருபுறம் பரந்தூர் கைவிடப்படுகிறது; மறுபுறம் வேறு இடம் தேடப்படுகிறது; அதே நேரத்தில் existing Chennai airport-க்கு டெர்மினல் 5 மற்றும் capacity expansion பற்றி பேசப்படுகிறது; இப்போது operator மாற்றம் பற்றிய செய்தியும் வருகிறது.

இது எந்த ஒரு தனிப்பட்ட முடிவையும் எதிர்ப்பது அல்ல.

எனது கவலை ஒன்றே சென்னையின் aviation infrastructure-க்கு அடுத்த 20–30 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த Master Plan என்ன?

முதலீட்டாளர்களுக்கும், தொழில்துறைக்கும், logistics sector-க்கும் policy stability, clarity and continuity மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு சில வாரங்களுக்கும் வெவ்வேறு inputs, புதிய announcements, மாற்றப்பட்ட directions — somersaults, U-turns, left turns, right turns — என்ற தோற்றம் உருவாகக் கூடாது.

சென்னைக்கு ஒரு airport strategy வேண்டும்; ஒவ்வொரு airport decision-ஐ தனித்தனியாக பார்க்கும் அணுகுமுறை வேண்டாம்.

தொழில் வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், உலகத்தரமான connectivity-க்கும் — தெளிவான, நீண்டகால, தொடர்ச்சியான Aviation Policy அவசியம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.