தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை மாணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்திடுக! – ததீஒமு

6 hours before
கோவை மாணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்திடுக! – ததீஒமு

கோவையில் தலித் மாணவர் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கென்னடி – சுமதி தம்பதியரின் இரண்டாவது மகன் அமுதன் (19) கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்கல்லூரியில் மாணவர்களிடையே நிலவி வந்த போதைப்பொருள் புழக்கம் குறித்து அமுதன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மலுமிச்சம்பட்டி பகுதியில் தனது நண்பருடன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த அமுதனை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளது. இக்கொடுஞ்செயலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மாணவர் அமுதன் கூறிய தகவலை வெளியே சொன்ன கல்லூரி நிர்வாகம் இக்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென தீஒமு வலியுறுத்துகிறது.

மேலும் மாணவர் அமுதனின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும், சட்டப்படி தீர்வுதவியும் உடனடியாக வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை முடியும் வரை பிணையில் வெளிவராத வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

இப்படுகொலைக்குப் பின்னரும், தமிழ்நாடு அரசு போதைப்பொருள் ஒழிப்பை வெறும் விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மட்டும் கருதாமல், போதைப்பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க போர்க்கால அடிப்படையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது என்று மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.