தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வணிக சமையல் எரிவாயு விலை இரண்டு ஆண்டுகளில் 66 சதவீதம் உயர்வு டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கேள்வியால் அம்பலமான மோடி அரசின் முகம்

5 Aug 2026, 9:25 pm
வணிக சமையல் எரிவாயு விலை இரண்டு ஆண்டுகளில் 66 சதவீதம் உயர்வு டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கேள்வியால் அம்பலமான மோடி அரசின் முகம்

வணிக சமையல் எரிவாயு விலை இரண்டு ஆண்டுகளில் 66 சதவீதம் உயர்வு டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கேள்வியால் அம்பலமான மோடி அரசின் முகம்

புதுதில்லி , ஆக. 5 -கடந்த இரண்டு ஆண்டுகளில் வணிக சமையல் எரிவாயுவின் விலை 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எரிவாயு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் (OMCs) உள்ளதாகவும் ஒன்றிய அரசுதெரிவித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதிலில் இந்தத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை உயர்வு மற்றும் விநியோகக் குறைவு விவரங்கள்

வணிக எரிவாயு விலை உயர்வு: 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 2024 ஏப்ரல் 1 அன்று ரூ. 1,764 ஆக இருந்த நிலையில், 2026 ஜூலை 1 அன்று ரூ.2,930 ஆக உயர்ந்துள்ளது. இது 66 சதவீதமாகும்.உள்நாட்டுச் சிலிண்டர் முன்பதிவு சரிவு: நடப்பாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நாடு முழுவதும் சமையல் எரிவாயு முன்பதிவு வெறும் ஆறு மாதங்களில் 5.39 கோடி சிலிண்டர்கள் வரை குறைந்து ள்ளது. ஐஓசிஎல் (IOCL), பிபிசிஎல் (BPCL), எச்பிசிஎல் (HPCL) ஆகிய பொதுத்துறைநிறுவனங்களின் முன்பதிவு ஜனவரியில் 18.19 கோடியாக இருந்தது, ஜூன் மாதத்தில்12.80 கோடியாக 30 சதவீதம் சரிந்துள்ளது.உஜ்வாலா திட்டம் (PMUY): பிரதமரின்உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவானமுன்பதிவுகளும் ஜனவரியில் 4.37 கோடியிலிருந்து ஜூன் இறுதியில் 2.90 கோடியாகக் குறைந்து, 1.47 கோடி சிலிண்டர்கள் வரை சரிவை சந்தித்துள்ளன.

ஒன்றிய அரசின் மௌனமும் வி. சிவதாசன் எம்.பி. கண்டனமும்

சமையல் எரிவாயு விலை உயர்வால் குடும்பங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசுத்தரப்பில் நேரடியான மதிப்பீடுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், சிறு வணிகர்களுக்கு எந்தவொருசிறப்பு உதவியும் அறிவிக்கப்படவில்லை.

சர்வதேச விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசிய புவிசார் அரசியல் காரணங்களே விலை உயர்வுக்குக் காரணம்எனத் தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, விலையைக் கட்டுப்படுத்த எந்தவொரு நேரடித் தலையீடும் செய்யவில்லைஎன்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

விலை உயர்வால் கோடிக்கணக்கான குடும்பங்களும் சிறுதொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஒன்றிய அரசு விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட்டு எவ்வித நிவாரணமும் வழங்காமல் இருப்பதற்கு எம்.பி. வி. சிவதாசன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகக் கட்டுப் படுத்த ஒன்றிய அரசு தீவிரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.