முந்தய பக்கம்

தோழர் ஏ.கே.ரவி உடல் தானம்

1 hour before
தோழர் ஏ.கே.ரவி உடல் தானம்
<p><strong>தோழர் ஏ.கே.ரவி உடல் தானம்</strong></p><p>உதகை, அக்.3-பந்தலூர் ஏரியா கமிட்டி,தேவாலா கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தஉறுப்பினர் தோழர் ஏ.கே.ரவி வெள்ளியன்று வயதுமூப்பு காரணமாக காலமானார். இவரது உடல் உதகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.</p><p>நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் தோழர் ஏ.கே.ரவி (76). மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் வயது மூப்பு காரணமாக வெள்ளியன்று காலமானார். தான் இறந்த பின்னர்,தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்ய 2017 ஆண்டு விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாகவழங்கப்பட்டது. முன்னதாக, அவரது பூத உடலை ஊர்வலமாக கொண்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மருத்துவக்கல்லூரி அதிகாரிகளிடம் ஒப்படைந்தனர். இதில், சிபிஎம்மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், பந்தலூர் தாலூகா செயலாளர் ரமேஷ், கூடலூர் தாலூகா செயலாளர் சுரேஷ், உதகை தாலூகா செயலாளர் நவீன்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராசி.ரவிக்குமார், வர்கீஸ், மணிகண்டன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram