தோழர் செண்பகவள்ளி காலமானார்
2 hours before

தோழர் செண்பகவள்ளி காலமானார்

சென்னை, செப். 27-சென்னை தொலைபேசியில் பி.எஸ்.என்.எல்.யு.,சி.எம்.எக்ஸ் கிளைத்தலைவராக சங்க பணியாற்றிய தோழர் எஸ்.செண்பகவள்ளி (78) உடல்நலக்குறைவால் ஞாயிறன்று (செப். 27) காலமானார்.

2008ஆம் ஆண்டு பணிஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியர் சங்கத்தை சென்னை தொலைபேசியில் உருவாக்கிய 7 பேரில் செண்பகவள்ளியும் ஒருவர். 2022 வரை மாநில உதவித்தலைவர் மற்றும் மாநில உதவிச் செயலராகவும் திறம்பட பணியாற்றினார்.

தற்போது சங்கத்தின் கல்மண்டபம் மாவட்டத்தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

சேவையிலிருந்த போதும், ஓய்வுபெற்ற பின்னரும் அனைத்துப் போராங்டங்களிலும் பங்கேற்றார்.

இடதுசாரி இயக்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு தொழிலாளர்கள், மக்கள், மகளிர்என அனைத்து பகுதியினருக்காகவும் களப்பணியாற்றினார்.

தோழர் சீனியர் செண்பகவள்ளி மறைவுக்கு மாநிலச்்செயலர் என்.பஞ்சாட்சரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.இறந்தும் சமூகத்திற்கு உதவிடும் வகையில் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அவரது உடல் திங்களன்று ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.