உடன்பாடு எட்டப்படாமல் முடிந்த காலநிலை மாநாடு
yesterday

உடன்பாடு எட்டப்படாமல் முடிந்த காலநிலை மாநாடு

அண்டாலியா, நவ. 23 -துருக்கி நாட்டின் அண்டாலியா நகரில் நவ.9-22 வரை நடைபெற்ற ஐ.நா.வின் ‘காப்-31’ (COP31) காலநிலை உச்சிமாநாடு உடன்பாடு எடப்படாமல் தோல்வியில் முடிவடைந் துள்ளது. படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான விவகாரத்தில் நாடு களிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் நவ.9 அன்று துவங்கிய மாநாடு வரலாற்றில் இல்லாத வகையில் மேலும் இரண்டு நாட்கள் நீடித்தது. இழுபறிநீடித்த நிலையிலும் உடன்பாடு எட்டப்படாமல் மாநாடு முடிவடைந்துள்ளது.

உலக வெப்பநிலை மிகக்கடுமையாக அதிகரித்து வருகிறது. எல் நினோ தாக்கம் காட்டுத்தீ, பெருமளவிலான வெள்ளம் என பல நாடுகள் பேரழிவுகளை சந்தித்து வரும் நிலையில் இம்மாநாட்டின் இறுதி முடிவுகளை உலகமே எதிர்பார்த்து இருந்த நிலையில் பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

வரைவு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு

உலக அளவில் படிம எரிபொருட்களுக்கான தேவையைக் குறைப்பது குறித்து வரைவு ஒப்பந்தத்தில் எந்தவொரு குறிப்பும் இல்லாததே முரண்பாட்டுக்கு காரணம். உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாதலைமையிலான எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அழுத்தத்தால் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின்பயன்பாட்டை குறைப்பது தொடர்பான உறுதிமொழி வரைவு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இதனை மீண்டும் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்க வலியுறுத்தி

பனாமா மற்றும் ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன்,பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தனர்.இதுகுறித்து பனாமா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் நவரோ கூறுகையில், “படிம எரிபொருட்கள் குறித்த வார்த்தையே இல்லாத ஒரு காலநிலை ஒப்பந்தத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; நாங்கள் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.மேலும் காலநிலை மாநாட்டு வரலாற்றில் முதல்முறையாக, இந்த வரைவு ஒப்பந்தத்தில் புவி வெப்பமயமாதலை (1.5 டிகிரிசெல்சியசுக்குள்) கட்டுப்படுத்தும் இலக்கு தவறவிடப்பட்டுவிட்டதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் தற்போது நிர்ணயிக்கப் பட்ட அளவை மீறியவெப்பநிலை (Overshoot - ‘ஓவர்ஷூட்’)எனப்படும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த எல்லையைத் தாண்டினால், கோடிக்கணக்கான மக்கள் கடல் மட்ட உயர்வு மற்றும் தீவிர வெப்ப அலைகளால் பாதிக்கப் படுவார்கள் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு பேரிடர்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கான நிதியை 2035-க்குள் 11.12 லட்சம்கோடி ரூபாயாக (120 பில்லியன்டாலராக) உயர்த்தும் அம்சம் கடந்த கால வரைவில் இருந்தது; ஆனால் தற்போது அது நீக்கப் பட்டுள்ளது.

இதற்கு ஆப்பிரிக்க நாடுகளின்பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் ஜானெட்டர் அக்யேமன் ராலி

ங்ஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “நாங்கள் இங்கு பிச்சை எடுக்க வரவில்லை. வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ள எங்கள் மக்களுக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமையைக் கேட்கவே வந்துள்ளோம்” என கடிந்து பேசியுள்ளார்.