தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றி மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாட்டம்

1 hour before
சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றி மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாட்டம்

சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றி மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாட்டம்

ஈரோடு, ஆக.16-நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வெகு

ஜன அமைப்புகள் சார்பில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.இந்திய நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் சனியன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகள் சார்பில் தேசியக்கொடி ஏற்றி, மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் வரவேற்றார். தேசியக்கொடியை மூத்த தலைவர் எம்.ராஜகோபால், செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், டி.ஜெயபால், நந்தகோபால், எஸ்.சுப்பிரமணியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆர்.மைதிலி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ச.மணிகண்டன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிறைவாக, சிறப்பு கிளைச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

ஊத்துக்குளியில் கட்சியின் தாலுகாக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி தலைமை வகித்தார். தேசியக்கொடியைவி.கே.பழனிசாமி ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கொளந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பாலமுரளி, பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குன்னத்தூர் கட்சி அலுவலகத்தில் விடுதலை நாள் கொடியேற்று விழா பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடியினை நகரச் செயலாளர் சின்னசாமி ஏற்றி வைத்தார். மூத்த தோழர் ஆசிரியர் ஜார்ஜ் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, நல்லெண்ண உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சோளிபாளையம், பாரதி நகரில் நான்காம் ஆண்டு மக்கள் விளையாட்டு விழாவும், சுதந்திர தின கொடியேற்று விழாவும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிஐடியுமாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், பனியன் சங்க துணைத்தலைவர் பாண்டியராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 15.வேலம்பாளையம் பகுதியிலுள்ள மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசலில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் ஹாஜி ஜே.அப்துல் சமது தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில், செயலாளர் இப்ராஹிம், ஹஜ்ரத் முகமது தஸ்லீம், பொருளாளர் எம்.முகமது சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில், சனியன்று சுதந்திர தின கொடியை கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் ஏற்றி உரையாற்றினார். தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கௌரவத் தலைவர் வி.ஆண்டாள் தலைமை வகித்தார். தேசியக்கொடியை எழுத்தாளர் ஆர்.ஹரிஹரன் ஏற்றி வைத்தார். இதில்,சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஓய்வூதியம் பெற்ற 30க்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியத்திற்கான அரசாணை நகல் வழங்கப்பட்டது. ரத்தினபுரி பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட்ரிக்ஸ், செயலாளர் ஏ.சாதிக் பாட்ஷா, நிர்வாகிகள் என்.ஆர்.முருகேசன், ஜி.குழந்தைராஜ், ஜெய் மேன்யல் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிங்காநல்லூர் அருகே உள்ள பிரிட்டிஷ் வாட்ச் பள்ளி அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு, கட்சியின் கிளைச் செயலாளர் ஆர்.சனோஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகே.ரத்தினகுமார் வரவேற்றார். தேசியக்கொடியை முன்னாள் ராணுவ வீரர் எஸ்.ஜெகதீசன், செங்கொடியை மூத்த தோழர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்திரன், கே.மனோகரன், நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி உள்

ளிட்டோர் பங்கேற்றனர். மாதர் சங்கம் சார்பில் புலியகுளம் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.உஷா, நகரச் செயலாளர் சுமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்செயலாளர் த.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கஅலுவலக வளாகத்தில், சுதந்திர தின விழா நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சத்யா தலைமை வகித்தார். சங்க நிர்வாகி அப்துல் சமது தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்தும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. அப்போது, உடல்நலம் குன்றியவர்கள், முதியவர்கள் மற்றும் சங்கத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தடாகம் சாலை, டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநிலப் பொருளாளர் டென்னிஸ் கோவில்பிள்ளை தலைமை வகித்தார். செயல் அமைப்பு தலைவர் ஆ.நந்தகுமார் வரவேற்றார். தமிழ் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் கா.ச.அப்பாவு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்க நிர்வாகி பேரா.காமராஜ், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் தே.ஈஸ்வரமூர்த்தி, மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில், இன்ஜினியரிங் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, சிபிஎம்ஒன்றியச் செயலாளர் கோகுலகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் என்.ராஜா, தமுஎகச மயில்சாமி, குத்தூசி குருசாமி படிப்பக நிர்வாகி கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வாலிபர் சங்கஒன்றியச் செயலாளர் பிரகதீஸ்வரன்நன்றி கூறினார்.

நாமக்கல்

சிபிஎம் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியுமாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர்பங்கேற்றனர். பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்செங்கோடு நகர அலுவலகத்தில், நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சுதந்திர தின விழா மற்றும் உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கே.மோகன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், தேவராஜன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் கவிதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மோட்டார் சங்க மாவட்ட உதவிச்செயலாளர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாபு நன்றி கூறினார்.

ஈரோடு

சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு, கட்சியின் மாவட்ட செயற்

குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். தேசியக்கொடியை மூத்த தோழர் எம்.அண்ணாதுரை, செங்கொடியை மாநிலக்குழு உறுப்பினர் மாலதி சிட்டிபாபு ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதில் மாவட்ட

செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.