உச்சநீதிமன்றத் தீர்ப்பு நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணானது! அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்!
2 hours before

உச்சநீதிமன்றத் தீர்ப்பு நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணானது! அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது’இன்று தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம்,மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி!இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்! 3

சென்னை, நவ. 27 -உச்சநீதிமன்றத் தீர்ப்பு நீதி அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த தீர்ப்பு பரிபாலன நெறிகளுக்கு முரணானது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இந்தச் சூழலில், அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்;மத வேறுபாடு கடந்து ஒருமைப் பாட்டை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேண்டுகோள் விடுத்துள்ளது.

இடைக்காலத் தீர்ப்பிலேயே இவ்வளவு விபரீதங்களா?

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:திருப்பரங்குன்றம் கார்த்திகைதீபம் பிரச்சனையில் உச்சநீதிமன்ற த்தின் இன்றைய இடைக்கால உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது. நீதிபரிபாலன முறைமைக்கு உகந்ததாக தீர்ப்பு அமையவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும், மலையின் பாதுகாப்பை மத்தியத் துணைக் காவல்படையினர் வசம் ஒப்படைப்பதாக வும், தர்காவில் இருந்து 50 மீட்டர்தூரத்தில் எல்லோரும் தீபம் ஏற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அதிர்ச்சிதரத் தக்கது. வழக்கின் பிரதான கேள்விக்கு விடை காண்கிற இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், இடைக்கால உத்தரவு என்பதே இவ்வளவு விபரீதமாக அமைவது எந்த வகையிலும்ஏற்க இயலாதது.

வரலாற்றில் தவறான முன்னுதாரணம்மதவெறி அமைப்புகள் ஏற்கெனவே மக்கள் மத்தியில் வெறியூட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மலையின் மீது எல்லோரும் தீபம் ஏற்றலாம்என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பதற்றத்தை உருவாக்கக் கூடியதாகும். பாபர் மசூதி இடிப்பு என்ற கசப்பான நிகழ்வை இந்தியா சந்தித்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

கூட்டாட்சிக்கு விரோதமான உத்தரவாகவும் இது அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள், சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைப்பது என்பது இதுவரை காணாதநிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைப் புறந்தள்ளி வழங்கப்பட்டுள்ள உத்தரவு தவறானமுன்னுதாரணமாக வரலாற்றில்நிற்கப்போகிறது. உச்சநீதிமன்றத் தின் நீதிபரிபாலன முறை மீறல் என்றே இந்த இடைக்கால உத்தரவு கருதப்படவேண்டியுள்ளது.

1991 சட்டத்தை கவனத்தில் கொள்ளாத தீர்ப்பு‘1947 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் - 1991’ இந்தியாவில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்கிற வகையில் நீண்ட நெடிய விவாதங்களின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், அந்தசட்டம் எண்ணத்திலும், எழுத்திலும் உச்சநீதிமன்றத்தினாலேயே கருத்தில் கொள்ளப்படாதது அரசிய லமைப்புச் சட்ட நெறிகளுக்கும், விழுமியங்களுக்கும் முரணானது ஆகும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாமாகவே கவனத்தில் எடுத்து உத்தரவை சரிசெய்ய வேண்டும்.திருப்பரங்குன்றம் பிரச்சனை யில் உறுதியான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் முந்தைய அரசுகளும் மேற்கொண்டு வந்துள் ளன. ஆகவே தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்பிரச்சனையில் ஓரணியில் திரண்டு குர லெழுப்ப வேண்டும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுசட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து உரிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எல்லோரும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை விழுமியம் நிலை நாட்டப்படவும் உடனடியாக மக்களைத் திரட்டி தங்களின் உறுதியானநிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மத வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தங்களின் ஒன்றுபட்ட உணர்வைவெளிப்படுத்த வேண்டும்.

‘மத நல்லிணக்கம் பேணு வோம்; மனிதம் போற்றுவோம்!’ என்ற முழக்கமே தமிழ்நாடு மண் முழுவதும் எதிரொலிக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.