தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நம்பிக்கை நகர் குடியிருப்பை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

1 hour before
நம்பிக்கை நகர் குடியிருப்பை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நம்பிக்கை நகர் குடியிருப்பை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, செப்.28-பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் வாரிய குடி யிருப்புகளை புதுப்பித்து கட்டித்தர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

நம்பிக்கை நகர் பகுதி யில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதனால் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது. அவ்வப்போது இடிந்தும் விழுகிறது.

இந்த குடியிருப்பில் முதல் மாடியில் வசிக்கும் பவுல்ராஜ் என்பவரை பார்த்துவிட்டு அவரது உறவி

னர் ஆனந்த் தரைத்தளத் திற்கு படிக்கட்டில் இறங்கி யுள்ளார். அப்போது படிக்கெட்டி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆனந்தின் தலை மற்றும் இடது தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி தலைவர்கள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பகுதிச் செய

லாளர் ஐ.ஆர்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை

யில், “வாரிய குடியிருப்பு களை முழுமையாக அகற்றி

விட்டு புது அடுக்குமாடி குடியிருப்பை அரசு கட்டித்தர வேண்டும்.

இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மீன வர்கள் என்பதால், அரு காமையிலேயே தற்காலிக குடியிருப்பு அமைத்து அவர்களை தங்க வைக்க வேண்டும், மீனவர்களிடம் பங்களிப்புத்தொகை வசூ லிக்க கூடாது” என்று வலி யுறுத்தி உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.