மத்திய சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம்
yesterday

மத்திய சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம்

சென்னை, ஆக.29-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் நடை பெற்ற இயக்கத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாரன், கே.சாமுவேல்ராஜ், கே.கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினர்.

கூட்டத்தில் தலைவர்கள் பேசிய முக்கியக் கருத்துகள்ஜி.சுகுமாறன்

மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் பேசுகையில் அத்தியா வசியப் பொருட்களின் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கையை உயர்த்தி னால், குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்திய தென்னிந்திய மாநி லங்களுக்குக் குரல் கொடுக்கும் உரிமை குறையும். வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடும் இளை ஞர்கள் மீது ஒடுக்குமுறைகள் ஏவப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கே.சாமுவேல்ராஜ்

மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் பேசுகை யில்,சென்னை மாநகரப் பகுதிகளில் பல ஆண்டுகளாகப் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு உரிய வீட்டு உரிமை மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு வழங்க வேண்டும். குடி நீர் விநியோகம் மற்றும் மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுடன், ஸ்மார்ட் மீட்டர் மூலம் ஏழை எளிய மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்படுகிறது. பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு பலமடங்கு உயரும் அதே வேளை யில், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கே.கனகராஜ்

மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், ஏழை எளிய மக்களின் வீடுகளைக் காலி செய்யும் அடாவடி நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். கேரளாவைப் போலத் தமிழகத்திலும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கி விலைவாசியைக் கட்டுப் படுத்த வேண்டும். அரசுப் பணி யிலுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றார்.

மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சி.கோபி குமார், கே.திருச்செல்வன் மற்றும் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல தோழர்கள் இத்தொடர் இயக்கத்தில் பங்கேற்றனர்.