மக்கள் பிரச்சனைகளுக்கு வீதியில் இறங்கி போராடுவது கம்யூனிஸ்ட் இயக்கமேபொதுமக்கள் பாராட்டு
9 hours before

மக்கள் பிரச்சனைகளுக்கு வீதியில் இறங்கி போராடுவது கம்யூனிஸ்ட் இயக்கமேபொதுமக்கள் பாராட்டு

ராணிப்பேட்டை, செப். 2-ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா மருதாலம் கூட்டு ரோடு பகுதியில் தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்க நிறைவு நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மாரியப்பன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “அரசுகளின் கார்ப்பரேட் சாதகக் கொள்கைகளுக்கும், இந்துத்துவ அரசியலுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. வீடற்ற மக்க ளுக்கு பட்டா, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தரமான கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காகவும் உழைக்கும் வர்க்க நலனுக்காகவும் ஒன்றிணைந்து போராடுவோம்” எனக் கூறிய அவர் மக்கள் சந்திப்பின்போது பொதுமக்கள் கம்யூனிஸ்டு

களின் சேவையை பாராட்டியதாக பெரு மிதத்துடன் கூறினார்.

இந்நிகழ்வில் மூத்த தோழர்கள் எல்.சி. மணி, டி. சந்திரன், ரேணு, மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இரா. மோகன்ராஜ், பொருளாளர் பொன். சிட்டிபாபு, என். ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை செயலாளர் வ. வேலு நன்றி கூறினார்.