தென்சென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் 220 குழுக்கள் 9 நாட்கள் தினசரி பிரச்சாரம்
1 hour before

தென்சென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் 220 குழுக்கள் 9 நாட்கள் தினசரி பிரச்சாரம்

சென்னை, ஆக. 23 -மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு கிளர்ச்சிப் பிரச்சாரம் ஞாயிறன்று (ஆக.23) தென்சென்னை மாவட்டத்தில் தொடங்கியது.

ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு துறைகளில் ஒப்பந்த முறையை மாற்றி பணி நியமனங்களை செய்யவேண்டும்,மாநில அரசு, சமய நிலம், இனாம் நிலங்களில் குடியிருப்போருக்கு அந்நிலங்களை உரிமையாக்க வேண்டும், அரசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் வட்டார மருத்துவமனைகளை நவீனப்படுத்தி தரம் உயர்த்தி 24 மணி நேர செயல்பட வைக்கவேண்டும், அனைத்துப் பொருட்களும் தரமான முறையில் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெறுகிறது.

இவற்றோடு பகுதி, வட்டம் அளவிலான கோரிக்கை வலியுறுத்தியும் ஆக. 26-31 வரை தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் ஆக.23ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 220 குழுக்கள் தினசரி 50 முதல் 100 வீடுகளை மட்டும் சந்தித்துதுண்டு பிரசுரம் வழங்கி மக்களோடு உரையாடும் வகையில் இந்த இயக்கம் நடைபெறுகிறது.

விருகம்பாக்கம் தொகுதி, எம்ஜிஆர்நகர் மார்க்கெட்டில் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ச.லெனின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தி.நகர் பகுதி, 131வது வட்டச் செயலாளர் எம்.முரளி தலைமையில் நடைபெற்ற இயக்கத்தை மாவட்டச் செயலாளர்ஆர்.வேல்முருகனும் தொடங்கி வைத்தனர்.