தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உள்ளாட்சிக்கு அதிகாரம், நிதி சிபிஐ(எம்) நிலைப்பாடும் நடைமுறையும் - உ.வாசுகி

17 hours before
உள்ளாட்சிக்கு அதிகாரம், நிதி சிபிஐ(எம்) நிலைப்பாடும் நடைமுறையும் - உ.வாசுகி

உள்ளாட்சிக்கு அதிகாரம், நிதி சிபிஐ(எம்) நிலைப்பாடும் நடைமுறையும் - உ.வாசுகி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும் நிதியும் பகிரப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால அடிப்படை நிலைப்பாடு. கீழ்மட்ட ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, முடிவெடுப்பதில் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றுடன் பிணைந்த கொள்கை முடிவு இது.

சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி என்பது கூட்டாட்சிககோட்பாட்டின் முக்கியத் தூண் என்ற புரிதலிலிருந்து உருவானது.

காகிதத்தில் மட்டும் அதிகாரம்

73, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், அவற்றின் நேர்மறைஅம்சங்களின் சாராம்சம் பெரிதாக நிறைவேறவில்லை. இந்தத் திருத்தங்கள் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 29 அதிகாரங்களையும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 18 அதிகாரங்களையும் வழங்கின. ஆனால் அவை முழுமையாகப் பகிரப்படவில்லை. ஒன்றிய அரசின் நிதிஒதுக்கீடு போதுமானதாக இல்லை; அதிலும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிதிஆணையப் பரிந்துரைகள் முழுமையாக அமலாவதில்லை. மாநில அரசுகளும் நிதியை முழுமையாகப் பகிர்வதில்லை. நிதித் தன்னாட்சி இல்லாததுஉள்ளாட்சிகளின் செயல்பாட்டை முடக்குகிறது; திருத்தங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.

அதே சமயம், இந்தத் திருத்தங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சில முக்கிய விமர்சனங்களும் உண்டு.இவை வருவதற்கு முன்பு கேரளாவில் இருந்த ‘மாவட்டநிர்வாகச் சட்டம்’ முற்போக்கானது; புதிய திருத்தங்கள் அதைவிடப் பின்னடைவானவை என்று சுட்டிக்காட்டிய தோழர் இ.எம்.எஸ்., இதை “ஓரடி பின்னால்” என்று வர்ணித்தார். புதிய திருத்தங்களால் மாவட்ட அளவில்,மக்கள் பிரதிநிதிகளைவிட அதிகார வர்க்கத்துக்கே அதிகாரம் வழங்கப்பட்டது; உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலாக அதிகார வர்க்கம் வைக்கப்பட்டது. இதனால் வலுவான மாவட்ட உள்ளாட்சி என்பது அடிபட்டுப்போனது. அதிகாரப் பகிர்வு கட்டாயமாக்கப்படாமல், அரசின், அதிகார வர்க்கத்தின் விருப்பத்துக்கு விடப்பட்டது.மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் இந்த விமர்சனங்கள் வெற்று வார்த்தைகள் அல்ல. கோட்பாட்டுடன், கடந்த காலத்தில் கட்சி ஆற்றிய பங்களிப்பின் அனுபவப் படிப்பினைகளும் அவற்றில் இணைந்துள்ளன. ராஜீவ் காந்தி காலத்தில் இந்தத் திருத்தங்கள் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, இடதுசாரிகள் ஆண்ட கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஜனநாயகப் பரவலாக்கலுக்குமுன்னோடியாகத் திகழ்ந்தன.

மேற்கு வங்கம்: பஞ்சாயத்து ஜனநாயகமும் நிலச் சீர்திருத்தமும்

மேற்குவங்கத்தில் 1977-இல் ஆட்சிக்கு வந்தஇடது முன்னணி, அடுத்த ஆண்டே தேர்தல் நடத்திமுழுமையான மூன்றடுக்குப் பஞ்சாயத்து அமைப்பைநடைமுறைப்படுத்தியது. இந்த மாதிரியே பின்னர் தேசிய அளவிலான பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்குமுன்மாதிரியானது. இந்தப் பஞ்சாயத்துகள் “ஆபரேஷன் பர்கா” என்ற நிலச் சீர்திருத்தத்துடன் இணைந்து செயல்பட்டன. 14 லட்சம் குத்தகைதாரர்கள் பாதுகாப்பான நில உரிமையுடன் பதிவு செய்யப்பட்டனர். நில அனுபோக விவரங்கள் பஞ்சாயத்து மூலம் உறுதி செய்யப்பட்டு, உடனடியாகத் தற்காலிக உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் நிலமற்ற ஏழைகள் அதிகாரம் பெற்றனர். வழக்கமான அரசு நடைமுறையில் இதற்குப் பல ஆண்டுகள்பிடித்திருக்கும்; பல தடைகளும் வந்திருக்கும். நாட்டில் விநியோகிக்கப்பட்ட மொத்த உபரிநிலத்தில் 20 சதவீதம் மேற்கு வங்கத்திலேயே விநியோகிக்கப்பட்டது. பெருநில உடைமையாளர்களின் ஆதிக்கம் தளர்ந்தது. நிலச் சீர்திருத்தமும் பஞ்சாயத்து அமைப்பும்கிராமப்புற ஏழைகளின் பங்கேற்பை உறுதி செய்து விவசாய உற்பத்தியை உயர்த்தின; நெல் உற்பத்தியில் மேற்குவங்கம்

நாட்டிலேயே முதலிடம் பிடித்தது. 1978 பெருவெள்ளத்தை, குறைந்த உயிரிழப்புடன் பஞ்சாயத்துகள் சமாளித்தது அவற்றின் செயல்திறனுக்குச் சான்று. மாநில அரசின் செலவில் சுமார் 35 சதவீதம் மூன்றடுக்குப் பஞ்சாயத்துகள் மூலமே செய்யப்பட்டது;நிதிப் பகிர்விலும் மேற்கு வங்கம் முன்னோடி.

வார்டு, வாக்குச்சாவடி அளவில் “கிராம் சன்சத்” (கிராம நாடாளுமன்றம்) என்ற தனித்துவமான அமைப்பும்உருவாக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை நேரடியாக விவாதித்து முடிவெடுக்க அது உதவியது. அந்தப் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் அதன் உறுப்பினர்கள்.18 வயது நிரம்பிய இளைஞர்களும் அதன் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று, ஊரின்வளர்ச்சிக்குக் குரல் கொடுக்க முடிந்தது. அன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி அம்சம் இது.கிராம சபை சட்டத்தில் இடம்பெற்றது பின்னாளில்தான்.

திரிபுரா: பழங்குடியினர் சுயாட்சியும் இளம் வாக்காளர்களும்

திரிபுராவில் 1978-இல் ஆட்சிக்கு வந்த இடது முன்னணி, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டடுக்குப் பஞ்

சாயத்து அமைப்பை உருவாக்கியது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலத்துக்கு

உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பழங்குடியின மக்களின் சுயாட்சிக்காக, திரிபுரா பழங்குடியினர் பகு

திகள் தன்னாட்சி மாவட்ட மன்றச் சட்டத்தை (TTAADC) 1979-இல் நிறைவேற்றியது. பழங்குடியினரின் மொழி,

கலாச்சார அடையாளங்களைப் பாதுகாத்து, சுய அதிகாரம் அளித்து, அவர்களை ஜனநாயக நீரோட்டத்தில்இணைத்தது குறிப்பிடத்தக்க சாதனை.

பழங்குடி அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கட்சியும் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, 1985-இல்அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணை இந்தத் தன்னாட்சி மன்றத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. நிலம், வனம், நீர், விவசாயம், கிராமநிர்வாகம் உள்ளிட்டவற்றில் சட்டமியற்றும், நீதி, நிர்வாக, நிதி அதிகாரங்கள் அதற்குக் கிடைத்தன. இன்று அதன்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 527 கிராமக் குழுக்கள், கிராம சபைகள் மூலம் பங்கேற்பு நிர்வாகத்தை உறுதி செய்கின்றன.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் திரிபுராமுன்னோடி. 2010-இல், வடகிழக்கு மாநிலங்களிலேயே முதன்முறையாக, மூன்றடுக்குப் பஞ்சாயத்துகளிலும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது; தன்னாட்சிமன்றக் கிராமக் குழுக்களிலும் அது அமலானது. பழங்குடியினப் பெண்கள் உட்படப் பெண்கள் முடிவெடுப்பதில் நேரடியாகப் பங்கேற்கத் தொடங்கினர். 1978 முதல் பஞ்சாயத்துத் தேர்தல்கள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் நடத்தப்பட்டன. 1983 திரிபுரா பஞ்சாயத்துச் சட்டம், பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18 ஆகக் குறைத்தது.அரசமைப்புச் சட்டத்தின் 61-வது திருத்தம் மூலம் நாடு முழுவதும் வாக்களிக்கும் வயது 18 ஆகக்குறைக்கப்பட்டதற்கு (1988) ஐந்து ஆண்டுகள் முன்பேஇது திரிபுராவில் நடைமுறைக்கு வந்தது.

கேரளம்: மக்கள் திட்டமிடலும் பெண்கள் அதிகாரமும்

கேரளத்தில் 1957-இல் இ.எம்.எஸ். தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசு, அதிகாரத்துவ மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மக்கள் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் பஞ்சாயத்து ராஜ்முயற்சிகளைத் தொடங்கியது. அரசை எல்லா மட்டங்களிலும் ஜனநாயகப்படுத்த இ.எம்.எஸ். தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான மாவட்டக் கவுன்சிலும் அதன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பும் கொண்ட இரண்டடுக்கு முறையைப் பரிந்துரைத்தது. ஒன்றிய–மாநில உறவுகளில் ஜனநாயகம் தேவைப்படுவதுபோலவே, மாநில–உள்ளாட்சி உறவுகளிலும் தேவை என்பது அப்போதே தெளிவாக முன்வைக்கப்பட்டது.

1996-இல் ஆட்சிக்கு வந்த இடது ஜனநாயக முன்னணி, “மக்கள் திட்டமிடல் இயக்கம்” மூலம்

மாநிலத் திட்ட நிதியில் கணிசமான தொகையை உள்ளாட்சிகளுக்குப் பகிர்ந்தளித்தது. நாட்டிலேயே மிகத் துணிச்சலான நிதிப் பரவலாக்கல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. உள்ளாட்சிகளுக்கான நிதி 1997–98-இல் ₹749 கோடியிலிருந்து (மாநிலத் திட்டஒதுக்கீட்டில் 26.23%) 2025–26-இல் ₹9,100 கோடியாக (28%) உயர்ந்தது. கிராமப்புறச் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், வறுமை ஒழிப்பு,பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் இது தெளிவான மாற்றங்களை ஏற்படுத்தியது. கிராம சபை, பெண்

கள் சபை, பாலர் சபை போன்ற ஏற்பாடுகள் மக்கள் பங்கேற்புக்கு உதவின. நிதிப் பகிர்வு மாநில அரசின்

கருணைக்கு விடப்படாமல், குறிப்பிட்ட சூத்திரத்தின் அடிப்படையில், பாகுபாடின்றிச் செய்யப்பட்டது. அதிகாரிகளும் வளங்களும் உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. மக்கள் முன்வைத்தவற்றை முறையான திட்டங்களாக மாற்ற ஓய்வுபெற்ற நிபுணர்கள் உட்படப் பலர் உதவினர். பயனாளிகள் தேர்வு கிராமசபை, வார்டு சபைகளில் வெளிப்படையாக நடந்தது.இதன் மிக முக்கிய விளைவு குடும்பஸ்ரீ இயக்கம்.

மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கட்டமைப்பு நீட்சியாக இடது ஜனநாயக முன்னணி அரசு அதை உருவாக்கியது; வறுமை ஒழிப்புக்கும் பெண்களின் அரசியல் அதிகாரத்துக்கும் அது பணியாற்றியது. நாட்டிலேயே முதன்முறையாக, உள்ளாட்சிகளின் திட்டஒதுக்கீட்டில் 10 சதவீதம் பெண்கள் நலனுக்கு ஒதுக்கப்பட்டது; இடதுசாரிப் பெண்ணிய அரசியலின் பிரதிபலிப்பு இது. 2018 வெள்ளம், கோவிட் நெருக்கடி ஆகியவற்றில் கேரளத்தின் அதிகாரப் பரவலாக்கல் தன் செயல்திறனை நிரூபித்தது. தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்திலும்உள்ளாட்சிகள் சிறந்த பங்களிப்பைச் செலுத்தின. கேரள உள்ளாட்சித் துறை பல ஒன்றிய அரசுத் திட்டங்களுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டு, நிர்மல்தேசிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளது.

மாநில உரிமையும் உள்ளாட்சி சுயாட்சியும்

மாநில உரிமைகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கும், உள்ளாட்சி சுயாட்சி பற்றியநிலைப்பாட்டுக்கும் இடையே ஆழமான, பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் ஒரே தத்துவத் தொடர்ச்சியின் இரு பகுதிகளாகவே கட்சி இவற்றைக் கருதுகிறது. ஜனநாயகப் பரவலாக்கலை ஒன்றிய–மாநில உறவுகள் பிரச்சனையிலிருந்து தனிமைப்படுத்த முடியாது என்பது இ.எம்.எஸ். முன்வைத்த தத்துவார்த்த அடிப்படை. ஒன்றிய அரசு, மாநில அரசு, மாவட்டம், பஞ்சாயத்து ஆகிய நான்கு நிலைகளையும் உள்ளடக்கிய “நான்கு தூண் ஜனநாயகம்” என்பதே அவரது முன்மொழிவு. மாநிலத்துக்கு அதிகாரம் பரவலாக்கப்படாவிட்டாலும், மாநிலம் அதிகாரத்தைக் கீழ்நிலைக்குப்பரவலாக்கத் தயாராக இல்லாவிட்டாலும், ஜனநாயகம் முழுமையடையாது.

இந்த இணைப்பு இரண்டு அடிப்படைகளில் வேரூன்றியுள்ளது. முதலாவது, ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிரான போராட்டம். மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரமும் தன்னாட்சியும் வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கட்சி,அந்தப் போராட்டத்தை மாநிலத்தோடு நிறுத்தாமல், அதிகாரத்தை மாவட்டம், பஞ்சாயத்து வரை கொண்டுசெல்வதையும் உள்ளடக்குகிறது. இரண்டாவது, கட்சியின் ஆவணங்களிலும் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்ற கோரிக்கைகள். 1999 மக்களவைத் தேர்தல்அறிக்கையில், “மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள்”, “மாவட்ட அமைப்புகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் அதிகாரப் பரவலாக்கம்” ஆகிய இரண்டும் ஒரே பிரிவில் இணைந்து இடம்பெற்றன. ஐமுகூ அரசுக்குஇடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதற்கு அடிப்படையாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கூடுதல் முயற்சியுடன்உருவான குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தில் இடம்பெற்ற “வலுவான மையம், வலுவான மாநிலங்கள், செயல்படக்கூடிய உள்ளாட்சிஅமைப்புகள்” என்ற முத்திரை வாக்கியமே இந்த ஒருங்கிணைந்த பார்வைக்குச் சான்று.இது வெறும் கோட்பாடு அல்ல; இடதுசாரிஆட்சிகளில் நடைமுறையானது. மாநிலத்துக்கு அதிகாரம் இருந்தால்தான் அதை உள்ளாட்சிகளுக்குப் பகிர முடியும். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும், ஒன்றியஅரசின் தலையீடின்றி, தங்கள் அதிகார வரம்புக்குள் மாநில அரசுகள் பஞ்சாயத்துகளுக்கு நிதி, நிர்வாகஅதிகாரங்களை வழங்கின. கேரளத்தின் மக்கள் திட்டமிடல் இயக்கம் மாநில அரசின் அரசியல் உறுதியால் மட்டுமே சாத்தியமானது.

நிலம் கைக்கு வராமல் அதிகாரம் பயன் தருமா?

மாநில முதலாளித்துவக் கட்சிகள், மாநிலத்துக்கு அதிகாரம், நிதிப் பகிர்வு பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன; அதேபோன்ற ஏற்பாட்டை உள்ளாட்சிகளுக்குச் செய்வதில்லை. அடிமட்ட ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, மக்கள் பங்கேற்பு உறுதியானால், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், நகர்ப்புற வசதி படைத்தோர், ஊழல்வாதிகள், சாதிய–பொருளாதார ஆதிக்கம் செலுத்துவோர் கொள்ளையடிப்பதில் தடங்கல் ஏற்படும்; அதிகார மையங்கள் கேள்விக்குள்ளாகும்.அதே நேரத்தில், அதிகாரப் பரவல் நடந்ததுமே உள்ளாட்சிகள் தாமாக முற்போக்காகிவிடாது. முதலாளித்துவ–நிலப்பிரபுத்துவ அணுகுமுறையின் தொடர்ச்சி இருக்கும்; ஆளும் வர்க்கக் குணாம்சங்களிலிருந்து அவை முற்றிலும் விடுபட முடியாது. ஆனாலும் உழைக்கும் மக்களுக்குச் சில அன்றாடப்பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும்; சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் அணிதிரளும் களம்கிடைக்கும்.

உள்ளாட்சி அமைப்புகள் குறித்த அசோக் மேத்தாகுழுவில் (1977–78) இ.எம்.எஸ். இடம்பெற்றிருந்தார். கிராமப்புற சுரண்டல் உறவுகளைப் பாதுகாத்துக்கொண்டே ஜனநாயகப் பரவலைக் கொண்டுவர அந்தக் குழு முயன்றது. இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி, குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல், தனது மாறுபட்ட கருத்தைத் தனிக் குறிப்பாக அளித்தார். ஜனநாயகப் பரவல், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான அன்றாடப் போராட்டங்களில் உழைக்கும் மக்களுக்கு உதவுவதால் அதில் தனக்கு நம்பிக்கை உண்டு என்றார். வாக்குரிமை, தேர்தல், சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகள் அடங்கிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவை நீண்ட போராட்டத்துக்குப் பின் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற உரிமை. சுரண்டும் சிலருக்கு எதிராகச் சுரண்டப்படும் பெரும்பாலான மக்கள்நடத்தும் போராட்டத்தில் அது ஒன்றிய, மாநிலஅளவில் பயன்படும் என்றால், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் உள்ளாட்சி மட்டத்தில் கிராமப்புற ஏழைகளின்ஆயுதமாக இருக்கும் என்றார், இ.எம்.எஸ்.ஆனால் கிராமப்புற அதிகார உறவுகளை மாற்றாதஜனநாயகப் பரவல் உதவாது என்று அவர் சுட்டிக்காட்டினார். “நிலம் கைக்கு வராமல், நிர்வாக அதிகாரத்தை மட்டும் பிரித்துக் கொடுப்பதால் கிராமப்புற ஏழைகள் எப்படிப் பலன் பெறுவார்கள்?” என்று கேட்டார். நிலச் சீர்திருத்தத்துடனும், நில உறவுகளில் மாற்றத்துடனும் இணைந்ததாகவே அதிகாரப் பரவல் இருக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். ஒன்றிய–மாநில உறவுகளில் மாற்றம் வராமல், மாநிலஉரிமைகள் அதிகரிக்காமல், அதிகாரப் பரவல்அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது என்றும் வாதிட்டார்.

இடதுசாரி மாற்றுப் பாதை

73, 74-வது திருத்தங்கள் உள்ளாட்சிகளுக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்தை வழங்கினாலும், அவற்றின் உண்மையான அதிகாரமும் நிதியும் இன்னும்முழுமையாகப் பகிரப்படவில்லை. இந்தத் திருத்தங்களுக்குப் பல ஆண்டுகள் முன்பே கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரி அரசுகள் ஜனநாயகப் பரவலாக்கலுக்கு அடித்தளமிட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன. மாநில சுயாட்சி இல்லாமல் உள்ளாட்சி சுயாட்சி சாத்தியமில்லை; உள்ளாட்சி சுயாட்சி இல்லாமல் மாநில சுயாட்சி அர்த்தமில்லை.வரம்புக்குட்பட்ட மாநில அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தியே ஏழைகளின் வாழ்க்கையில் எத்தனை முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டன! அதிகாரப்பரவலையும் ஜனநாயகத்தையும் ஏட்டளவிலும் வாயளவிலும் வாக்குறுதி அளவிலும் நிறுத்தாமல், வாழ்க்கையின் நிதர்சனமாக்குவது இடதுசாரி அரசியல்மட்டுமே. இடதுசாரிகளின் மாற்றுப் பாதையே உழைக்கும் மக்களுக்குப் பலன் தரும். அது நிரூபிக்கப்பட்ட ஒன்றும்கூட!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.