சொத்துவரியை குறைக்க சிபிஎம் தொடர்ந்து போராடி வருகிறது மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பா.சுகந்தி வாக்கு சேகரிப்பு!
3 hours before

சொத்துவரியை குறைக்க சிபிஎம் தொடர்ந்து போராடி வருகிறது மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பா.சுகந்தி வாக்கு சேகரிப்பு!

மதுராந்தகம், செப்.29-செங்கல்பட்டு மாவட்டம், சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதி களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளான சிறுநாகலூர், ஊனமலை, காட்டுக்கூடலூர், நேமம், அத்தி வாக்கம், ஓம் சக்தி நகர், பள்ளி பேட்டை, வடக்கு நகர், ஈஸ்வரன் கோவில் தெரு, வண்டி குப்பம், பழைய நகர், மாடவீதி, நேரு நகர், அம்பேத்கர் நகர், மலை நகர், காந்திநகர், எம்.ஜி.ஆர். சிலை, ராவத்த நல்லூர், வெங்கடேசபுரம், மேட்டு நகர், வஜ்ராபுரம், கடமலைப்புத்தூர், மணிபெரும்பேர் கண்டிகை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பா.சுகந்தி உரையாற்றுகையில், சொத்துவரியைக் குறைக்க வலி யுறுத்தி சிபிஎம் தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவித்தார். கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துச் சட்டத்தைக் கொண்டு வந்த

வர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும், ஆனால் தற்போது 100 நாள் வேலை முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கிராமப்புற மக்களுக்கு மட்டுமின்றி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி மக்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவு படுத்தி அமல்படுத்த வேண்டும் எனவும், கூலியை ரூ.700 ஆக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருவதாகக் குறிப்பிட்டார். கொரோனா காலத்தில் எண்ணற்ற ஏழை எளிய குடும்பங்களின் பசியைப் போக்கியது இந்தத் திட்டம்தான் என்பதால், அதனை நகர்ப்புறங்களுக்கும் நீட்டிக்கக் கோரி வருவதாகத் தெரி வித்தார்.

மேலும், அச்சிறுப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும், தாமரைக்குளம் தூர்வாரப்படும், பேரூராட்சிப் பகுதிகளில் சொத்து வரி குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அவர் வாக்கு சேகரித்தார். பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் பொதுமக்களும் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தத் தீவிர வாக்கு சேகரிப்புப் பிரச்சாரத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ரமேஷ்பாபு, சிங்காரவேலன், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஜெயந்தி, மு.தமிழ் பாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்து கலந்து கொண்டனர்.