தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குழந்தைகளிடம் ஓட்டு கேட்கவில்லை, அன்பைத்தான் கேட்டோம்: சுகந்தி நெகிழ்ச்சி

2 hours before
குழந்தைகளிடம் ஓட்டு கேட்கவில்லை,  அன்பைத்தான் கேட்டோம்: சுகந்தி நெகிழ்ச்சி

குழந்தைகளிடம் ஓட்டு கேட்கவில்லை, அன்பைத்தான் கேட்டோம்: சுகந்தி நெகிழ்ச்சி

மதுராந்தகம், செப். 22 -குழந்தைகளிடம் வாக்கு கேட்கவில்லை, அவர்களிடம் அன்பைத்தான் கேட்டோம் என செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதி இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர் பி.சுகந்தி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேடந்தாங்கல் பகுதியில் திங்களன்று (செப்.21) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவர், மாலையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது திடீரெனக் கனமழை பெய்ததால்பிரச்சாரப் பயணம் தற்காலிகமாகத் தடைபட்டது.

இதையடுத்து மழை சற்று ஓய்ந்த பின்னர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சியில் மீண்டும் வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது மீண்டும் கனமழை பொழிந்ததால், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் வேட்பாளர் சுகந்தி தஞ்சம் அடைந்தார். வேட்பாளர் சுகந்தி அங்கு வந்திருக்கும் தகவலையறிந்து, அப்பகுதியில் உள்ள கட்சி கிளை உறுப்பினர்களின் குழந்தைகள் கோவிலுக்கு வந்து அவரை வரவேற்றனர்.

அப்போது குழந்தைகளைக் கண்ட வேட்பாளர் பி.சுகந்தி, அவர்களிடம் ஓட்டு கேட்கவில்லை அன்பைத்தான் கேட்டோம் எனக் கூறி குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார். கடும் மழையிலும் வேட்பாளர் குழந்தைகளிடம் அன்பைப்பகிர்ந்து கொண்ட இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் மழை ஓய்ந்ததும் வேட்பாளர் பி.சுகந்தி தனதுபிரச்சாரத்தை மீண்டும்தொடர்ந்து மேற்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.