தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் சிபிஎம் கண்டனம்
9 hours before

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

சிபிஎம் கண்டனம்

தருமபுரி, ஆக. 8-தருமபுரி மாவட்டத்தில், தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம்வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் சேலம் மார்க்கங்களில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக 50 சதவீதம் கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய திடீர் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிர்வாகத்தின் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மற்றும் பயணிகளின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக் குழு வலியுறுத்துகிறது.மேலும் தருமபுரி - பென்னாகரம், அரூர் - தீர்த்தமலை சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கஅமைப்புக்கள், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம் ஆகியஇடங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைதெரிவித்துக் கொள்கிறது.

ஆகஸ்ட் 26 முதல் 31 முடிய மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத்தில் 500 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம் - தெருமுனைக் கூட்டங்கள் நடத்த உள்ளது. பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.