தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் சிபிஎம் தலைவர்கள் கைது : கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல்

1 hour before
தில்லியில் சிபிஎம் தலைவர்கள் கைது : கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல்

தில்லியில் சிபிஎம் தலைவர்கள் கைது : கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல்

புதுச்சேரி,அக்.10-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்ததை கண்டித்து புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடை பெற்றது.13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி ஜனநாயக உரிமையை பறித்துள்ள இந்திய தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்போராட்டங்கள் நடை

பெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இக்கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சனிக்கிழமை தில்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்த சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

யின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச் வந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், சீனு வாசன், கொளஞ்சியப்பன், சத்தியா, கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ராம்ஜி, ராமமூர்த்தி, சரவணன், மதிவாணன், ஆனந்து, ரமேஷ், உமா, சஞ்சய்சேகரன், பிரவீன் குமார் உட்பட திரளான சிபிஎம் தொண்டர்கள்இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.