60 ஆண்டுகளாக மனைப்பட்டா இன்றி தவிக்கும் மக்கள் சிபிஎம் போராட்ட அறிவிப்பு
16 hours before
<p><strong>60 ஆண்டுகளாக மனைப்பட்டா இன்றி தவிக்கும் மக்கள் சிபிஎம் போராட்ட அறிவிப்பு</strong></p><p>கடலூர், நவ. 23-நெல்லிக்குப்பம் திருக்கண்டீஸ்வரம் 12-வது வார்டில் 60 ஆண்டுகளாக மனைப்பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வலி யுறுத்தி, டிசம்பர் 9-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p><p>இதுதொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், பகுதிக்குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.தர்மேந்திரன், ஜி.அருண்மொழி, கிளைச் செயலாளர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
