தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட்டங்களே தீர்வுக்கான வழி! மக்கள் சந்திப்பு இயக்கத்தில் எஸ்.கண்ணன் பேச்சு

8 hours before
போராட்டங்களே தீர்வுக்கான வழி!  மக்கள் சந்திப்பு இயக்கத்தில்  எஸ்.கண்ணன் பேச்சு

போராட்டங்களே தீர்வுக்கான வழி! மக்கள் சந்திப்பு இயக்கத்தில் எஸ்.கண்ணன் பேச்சு

சிதம்பரம், ஆக 28- போராட்டங்களே தீர்வுக்கான வழி என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசினார்.

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலி

யுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை (ஆக.27) இரவு நடை

பெற்றது. இந்த இயக்கத்திற்கு நகர் மன்ற துணைத்தலைவர் முத்து

குமரன் தலைமை தாங்கி னார்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் பங்கேற்று

பேசியதாவது: பள்ளி, கல்லூரிகளில் நடை பெறும் தேர்வுகளில் வினாத்தாள்கள் வெளியாவ தில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் மிகப்பெரிய பகாசூர

முறைகேடு நடைபெறு கிறது. இதனை எதிர்த்து

மாணவர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் போராட்டமே தீர்வுக்கான வழி என்பது தெரியவருகிறது. மக்கள் மத்தியில் எழுச்சியுடன் நடைபெறும் போராட்டங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும். இதை நோக்கமாகக் கொண்டே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தி வரு கிறது என்றார்.

மேலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. விலைவாசி தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் குடும்பம் நடத்து வது சிரமமாக உள்ளது.

தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி அல்ல. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. தமிழ

கத்தில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராட முடிவு செய்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 6-ஆம் தேதி திருச்சியில் பல லட்சம் பேர் பங்கேற்கும் செம்படை பேரணி நடை பெற உள்ளது. இந்தப் பேரணி நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, வாஞ்சிநாதன், நகரசெயலாளர் ராஜா உள்ளிட்டோரும் பேசினர்.

இதனைதொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஆக.29)மதியம் லப்பை தெரு பள்ளிவாசலில் கட்சியின் நகர செயலளர் ராஜா தலைமையில் தொழுகை முடித்து வெளியே வரும் இஸ்லாமிய தோழர்க ளுடன் மக்கள் சந்திப்பு இயக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.