கல்லுகுட்டை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்
yesterday

கல்லுகுட்டை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.29-கல்லுகுட்டை மக்களுக்கு அரசு குடிமனைப் பட்டா வழங்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்வலியுறுத்தி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக சனிக் கிழமையன்று (ஆக.29)கல்லுகுட்டை திருவள்ளு வர் நகரில் பிரச்சாரம் நடைபெற்றது. அதனை தொடங்கிவைத்து பெ.சண்முகத்திடம் அப்பகுதி மக்கள் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த னர்.இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:கல்லுக்குட்டை பகுதி யில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வரு கின்றனர். சாலை, குடிநீர், வடிகால் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இல்லாததால் மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் கடும் பாதிப்பை எதிர் கொள்கின்றனர். இதே போன்று சென்னை யின் பலப்பகுதிகள் உள்ளது. 100 ஆண்டுகள் மக்கள் வசித்தாலும் பட்டாஇல்லாத பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது,ரேசன் கார்டு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். அரசு பட்டா வழங்காததால்அடிப்படை வசதிகள் பெற மக்கள் தகுதியற்றவர்களா மக்கள்? மக்கள் வாழும் பகுதிகளை குடியிருப்பாக அங்ககரித்து பட்டா வழங்க வேண்டும். நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தால் அவர்க ளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஆட்சே பனைக்குரிய புறம்போக்கு நிலம்என்பதால் அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பது கண்டத்திற்குரியது.கல்லுகுட்டை பகுதி மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதன்படி வரு வாய்த்துறைமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெய வேல் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாநிலக்குழுஉறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் எஸ்.முகமது ரஃபி, எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.