சென்னை விரைவு செய்திகள்
1 hour before

காட்டுமன்னார்கோவிலில்த.வி.ச. 24வது வட்ட மாநாடு

சிதம்பரம், ஆக. 23-தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காட்டுமன்னார்கோவில் 24-வது வட்ட மாநாடு தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.மூத்த தலைவர் பி.எஸ்.மகாலிங்கம் கொடியேற்றினார். ஆர்.ஜி.உமாநாத் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.எம்.ஷாகுல்அமீது வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.வட்ட செயலாளர் எம்.ஜாகிர்உசேன் அறிக்கையை முன்மொழிந்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் வாழ்த்திப் பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு நடைபெற்றது.மாநாட்டில் புதிய தலைவராக எம்.ஜாகிர்உசேன், செயலாளராக எம்.ஜி.தனபால், பொருளாளராக ஏ.மணிகண்டன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட வட்டக்குழுவும், 7 பேர்கொண்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின்மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். பழனிச்சாமி நன்றி கூறினார்.

கடலூர் அரசு மருத்துவமனையில்ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

சிதம்பரம், ஆக 23-சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இருவருக்கு இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (41), புவனகிரியை சேர்ந்த கணபதி (76) ஆகிய இருவரும் மாரடைப்பு ஏற்பட்டுஉயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இது, இருதயத்தில் அடைப்பட்ட ரத்தக் குழாயை விரிவடையச் செய்து இயல்பான ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

இந்த உயரிய மருத்துவ சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு நோயாளிக்கு பல லட்சம் ரூபாய்கள் செலவாகும். இந்த சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் முதல்வரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கண்டமருத்துவப் பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை தொடங்கியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும்பேருதவியாக உள்ளது. இதேபோல் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இங்கேதொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண் காவலரை ஏமாற்றியஆண் காவலருக்கு வலைவீச்சு

கடலூர், ஆக. 23-திருமணம் செய்வதாக கூறி பெண் காவலரை ஏமாற்றிய ஆண் காவலரைபோலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிவருபவர் சிவகுரு. இவர்சக பெண் காவலரை காதலித்து வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு முதல்இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் காவலர் வலியுறுத்திஉள்ளார். அதற்கு சிவகுருமறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெண் காவலருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுரு, பெண் காவலருடன் அவர்நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் காவலரின் அந்ததிருமணம் முறிந்து விட்டது.

அதன் பிறகு சிவகுருவுடன் அந்த பெண் காவலர் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அப்போதும் திருமணம் செய்து கொள்ளசிவகுரு மறுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் காவலர் கடலூர் அனைத்து மகளிர் காவல்

நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து

தலைமறைவான சிவகுருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்து

திருநாவலூர், ஆக.23 -கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் வண்டிப்பாளையம் கூட்டுச்சாலை (விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை) அருகே புடவை லோடு ஏற்றிச் சென்றமினி லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் லோடு வேனை மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து வேன் ஓட்டுநர் தினேஷிடம் விசாரித்து வருகின்றனர்.