போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண கெடிலம் ஆற்று புதிய பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தல்'
11 Oct 2026, 1:30 am

போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண கெடிலம் ஆற்று புதிய பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தல்'

கடலூர், அக்.10-கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதி தாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தை அக்.25-க்குள் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு

வர வேண்டும், போக்கு வரத்து சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ்குமார் அறி வுறுத்தினார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப் பட்டுள்ள பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது,

சென்னை–நாகப்பட்டி னம் தேசிய நெடுஞ்சாலை யில் தினமும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் செல்வதால், கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.

பாலத்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டு வரும்

போது உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிக ளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது. பாலத்தை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், கனரக வாக னங்கள் எளிதில் சென்று வரும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். திருவிழாக் காலப் போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறையின ரும் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்கு வரத்து மாற்றங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறி வுறுத்தினார்.