தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குதிரை மேய்ந்ததாகக் கூறி பட்டியலின இளைஞர் ராமர் படுகொலை! - ததீஒமு கண்டனம்

yesterday
குதிரை  மேய்ந்ததாகக் கூறி பட்டியலின இளைஞர் ராமர் படுகொலை! - ததீஒமு கண்டனம்

கோடைக்கானல் அருகே குதிரை மேய்ந்ததாகக் கூறி பட்டியலின இளைஞரான ராமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்களான ராமர் (26) மற்றும் பிரசாந்த் (20) ஆகியோர் மலைப்பகுதியில் இருந்து காய்கறிகளை குதிரையில் கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 30.07.2026 அன்று இரவு, ராமரின் வீட்டிற்கு வந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதி வெறி கும்பல் அறிவாளால் சரமாரியாக ராமரை வெட்டியுள்ளனர். உடல் முழுவதும் வெட்டுப்பட்ட ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி ஒருவர் மட்டும் இது வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் படுகாயமடைந்துள்ள பிரசாந்துக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு சட்டப்படி தீர்வுதவி தொகை, அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை அரசை ஏற்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ராமரின் குடும்பத்தினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் செ.முத்துராணி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் வனஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜாய்கோஸ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்தக் கொடூரமான சாதியப் படுகொலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழு நீதி கிடைக்கும் வரை சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தொடர்ந்து போராடும்." இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.