தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெல்லட் குண்டுகளை நாடிய எதேச்சதிகாரம்

23 Jul 2026, 9:52 pm
பெல்லட் குண்டுகளை நாடிய எதேச்சதிகாரம்

பெல்லட் குண்டுகளை நாடிய எதேச்சதிகாரம்

நாடாளுமன்றத்தை நோக்கி திங்கள்கிழமை (ஜூலை 20) நடைபெற்ற மாணவர் பேரணியின் மீது தில்லி காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறை, அனைத்து எல்லைகளையும் தாண்டி மனிதாபிமானமற்ற பாசிச வெறியாட்ட மாக அமைந்தது அம்பலப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று காயமடைந்த குறைந்தது 80 பேரில், குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஷைக் இர்ஷாத் மன்சூரி என்ற இளை ஞர் சிறிய ரக கொத்துக் குண்டுகள் (pellet guns) பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். பாலிகா பஜார் அருகே அதிரடிப் படைகளின் தாக்குதலுக்கு ஆளான அவரது முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் டஜன் கணக்கில் குண்டுகள் துளைத் துள்ளன. அரசு மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. தில்லி யில் குடிமக்கள் மீது இத்தகைய கொத்துக் குறு குண்டுகள் மற்றும் மின்சாரத் தடிகள் (shock ba tons) பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

காவல்துறை இதன் பயன்பாட்டை மறுத்தாலும், மத்திய ரிசர்வ் காவல்துறையின் கீழ் உள்ள அதிரடிப் படையின் அதிகாரப்பூர்வ உபகரணங்களாக இவை உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் விவசாயிகள் போராட்ட த்தில் பயன்படுத்தப்பட்ட இந்த ஆபத்தான ஆயுதங்கள், தற்போது தில்லி மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய அமைதியான போராட்டத்தின் மீதும் ஏவப்பட்டுள்ளது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. கண்ணீர் புகை குண்டுகள், தடியடி ஆகியவற்றைத் தாண்டி, மனித உடலைத் துளைத்து பார்வையை பறிக்கும் அல்லது உயிரைப் பறிக்கும் கொடூர ஆயுதங்களை ஜனநாயகப் போராட்டத்தின் மீது பிரயோகிப்பது எதேச்சதிகாரத்தின் உச்ச மாகும். மின்சாரத் தடிகள் மூலம் போராட்டக் காரர்களைத் தாக்கித் துன்புறுத்தியுள்ள காட்சிகளும் அம்பலமாகியுள்ளன.

வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்ற நியாயமான கல்வித்துறைச் சீர்கேடுகளுக்குத் தீர்வு காணக் கோரி எழுப்பப்பட்ட குரல்களை, துப்பாக்கி முனையில் மௌனமாக்கத் துடிக்கிறது மோடி அரசு. மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுக்கும் அரசு, கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு இளைஞர்களின் இரத்தத்தை நிலத்தில் சிந்தச் செய்கிறது.

இத்தகைய கொடூரமான அடக்குமுறைகள் மூலம் இளைய சமுதாயத்தின் கோபத்தையும் நியாயமான போராட்ட உணர்வையும் ஒரு போதும் ஒடுக்க முடியாது. ஜனநாயக முறையில் உரிமைகளைக் கேட்கும் இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகளையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் ஏவுவது பாசிச ஆட்சிக்கு இறுதி மணி அடிக்கும்.

பெல்லட் குண்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல்கள் வலுத்துள்ளன. அடக்குமுறைகளைக் கடந்து மக்கள் சக்தி வெல்லும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.