அஞ்சி நடுங்கிய மோடி அரசு!
10 Oct 2026, 10:54 pm

அஞ்சி நடுங்கிய மோடி அரசு!

தடுப்புக் காவலிலேயே உண்ணாவிரதம்: ஏ.ஏ.ரஹீம் எம்.பி., மாணவர்கள் அறிவிப்பு

கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கச் செயற்பட்டாளர்களுடன் இணைந்து, மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவருமான ஏ.ஏ.ரஹீம் தடுப்புக் காவலிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட தில்லி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது அவர்களின் முதல் கோரிக்கை.

மாணவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட கைபேசிகளையும் பைகளையும் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. இத்தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே காவலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலை, காவல்துறையின் நடத்தை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

ஆதாரம்: சிபிஐ(எம்) எக்ஸ் பக்கம் (கவுன்டர்கரன்ட்ஸ் மேற்கோள்)

“தில்லி ஹாட் தான் இன்று ஜந்தர் மந்தர்”: நேஹா போரா கைது

ஜந்தர் மந்தர் முற்றிலுமாகச் சீல் வைக்கப்பட்டதால், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தேசியத் தலைவர் நேஹா போரா போராட்ட இடத்தைத் தில்லி ஹாட்டுக்கு மாற்றி அழைப்பு விடுத்தார். அங்கிருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் சென்ற அவரும் மாணவர்களும் சப்தர்ஜங் விமான நிலைய மேம்பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். “மோடி–ஷாவால் எங்கள் எதிர்ப்பைக் கூண்டில் அடைக்க முடியாது” என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சி பதிவிட்டது.“மக்களைக் கைது செய்யலாம்; இயக்கத்தைக் கைது செய்ய முடியாது” என்று நேஹா போரா முன்னதாகக் கூறியிருந்தார். இதனிடையே, ஏஐஎஸ்ஏ மாணவர்களும் இடதுசாரிக் கட்சித் தொண்டர்களும் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.ஆதாரம்: சவுத் ஃபர்ஸ்ட், சிபிஐ(எம்எல்) லிபரேஷன் எக்ஸ் பக்கம், அல் ஜசீரா, ஏஎன்ஐ

யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் கைது

சமூகச் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரும் தில்லி ஹாட் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஜந்தர் மந்தரை அடைய முயன்ற குறைந்தது 200 பேர் கன்னாட் பிளேஸ் பகுதியில் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் தில்லி ஹாட்டில் திரள வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, சிவில் சமூகத்தின் அறியப்பட்ட முகங்களும் அடுத்தடுத்துக் கைதுசெய்யப்பட்டது, இப்போராட்டத்துக்கான ஆதரவு எவ்வளவு விரிவானது என்பதைக் காட்டுகிறது. மாணவர்கள்,வழக்கறிஞர்கள், இடதுசாரிக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், இணைய படைப்பாளிகள் எனப் பல தரப்பினர் ஒரேகோரிக்கைக்காக வீதிக்கு வந்துள்ளனர்.ஆதாரம்: தி ஸ்டேட்ஸ்மேன், கவுன்டர்கரன்ட்ஸ்

தில்லி கைதுகளைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம்: பெ.சண்முகம்

தில்லியில் தலைவர்களும் போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். தில்லி காவல்துறையும் துணை ராணுவப் படைகளும் கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்கள் மத்தியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, பினராயி விஜயன், உ.வாசுகி, ஜான் பிரிட்டாஸ், சிபிஐ(எம்எல்) தலைவர்கள் ஆகியோருடன் தாமும் கைது செய்யப்பட்டதாக அவரது அறிக்கை கூறுகிறது. கைது செய்யப்பட்டதலைவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காவல் வாகனங்களில் சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கப்பட்டனர் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.ஆதாரம்: பெ.சண்முகம் அறிக்கை (சவுத் ஃபர்ஸ்ட்)

விமானத்துக்குள்ளேயே நுழைந்து அபிஜீத் திப்கே கைது

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரும் மும்பையிலிருந்து வந்த விமானம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர். பயணிகள் இறங்கும் முன்பே காவலர்கள் விமானத்துக்குள் நுழைந்து இருக்கைகளுக்கு இடையே வரிசையாக நின்றனர்.

தென்மேற்கு மாவட்ட ஆய்வாளர் பிரவேஷ் கௌசிக் தலைமையிலான குழு, போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி மூவரையும் பிடித்தது. “பாரத் மாதா கி ஜெய், இன்குலாப் ஜிந்தாபாத்” என முழங்கியபடி அவர்கள் இறங்கினர். ஊடகத்தினரும் ஆதரவாளர்களும் மூன்றாம் முனையத்தின் முதல் வாயிலில் காத்திருந்த நிலையில், விமானத்துக்கு அருகே நிறுத்தியிருந்த பேருந்தில் ஏற்றி, வேறு வழியாக அவர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்பதைக் காவல்துறை உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

ஆதாரம்: கவுன்டர்கரன்ட்ஸ், ஏஎன்ஐ, சவுத் ஃபர்ஸ்ட், தி ஸ்டேட்ஸ்மேன்

“இந்திரா காந்தி கூட இப்படிச் செய்ததில்லை”

காவலர்கள் விமானத்துக்குள் நுழைந்ததைத் தனது இருக்கையிலிருந்தே அபிஜீத் திப்கே நேரலையாகப் பதிவு செய்தார். நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திரா காந்தி கூட இப்படிச் செய்ததில்லை என்றும், அமைதியாகப் போராட வந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல விமானத்திலிருந்து தூக்கிச் செல்கிறார்கள் என்றும் அவர் கூறினார். “கைதாவதற்காகவே வந்திருக்கிறேன்; கைது செய்யுங்கள். உங்களைக் கண்டு எங்களுக்குப் பயமில்லை” என்று கைகூப்பியபடி காவலர்களிடம் அவர் தெரிவித்தார்.“எங்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்; இந்தக் கைதுகளும் தில்லி முடக்கமும் பலத்தின் அடையாளம் அல்ல, சொந்த மக்களைக் கண்டு அஞ்சும் தலைவரின் அடையாளம்” என்று அவர்முன்னதாகப் பதிவிட்டிருந்தார். இதனிடையே, அவர் விமான நிலையத்தில் காவலில் இருந்தபோதே மகாராஷ்டிராவின்ஹிங்கோலி மாவட்டத்தில் அவரது பாட்டி காலமானார் என்ற செய்தி வெளியானது.ஆதாரம்: ஏஎன்ஐ, கவுன்டர்கரன்ட்ஸ், சவுத் ஃபர்ஸ்ட், தி ஸ்டேட்ஸ்மேன்

யூடியூபர் துருவ் ரதி வீட்டிலேயே கைது

யூடியூப்பில் சுமார் 3.3 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் விமர்சகர் துருவ் ரதீ, ஹரியானா மாநிலம் குர்கான் 56ஆவது செக்டரில் உள்ள அவரது இல்லத்திலேயே தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். காலை சுமார் 8 மணியளவில் ஏறத்தாழ 50 காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்து அவரை அழைத்துச் சென்றதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார். மக்களை ஈர்க்கக்கூடிய முக்கிய முகங்களில் ஒருவராக அமைப்பாளர்கள் அவரைக் கருதினர். இந்த சம்பவம் தொடர்பாக,“தவறுகளைக் கேள்வி கேட்கும், மௌனமாக இருக்க மறுக்கும் இளைஞர்களைக் கண்டு சர்வாதிகாரி நடுங்குகிறார்” என்று சிஜேபி பதிவிட்டது. போராட்டக் களத்துக்கே வராத ஒருவரை வேறு மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் சென்று பிடித்தது, முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கை என அக்கட்சி குற்றம்சாட்டுகிறது.ஆதாரம்: தி ஸ்டேட்ஸ்மேன், கவுன்டர்கரன்ட்ஸ், ஏஎன்ஐ

“மேலிடத்து உத்தரவு” என்று கூறி வழக்கறிஞர் ரத்னா சிங் சிறைவைப்பு

சிஜேபியின் சட்டப் பிரிவுத் தலைவரான வழக்கறிஞர் ரத்னா சிங், வீட்டிலிருந்து காரில் புறப்பட்டபோது காவலர்களால் சுற்றி வளைக்கப்பட்டார். எழுத்துப்பூர்வ உத்தரவு எதையும் காட்டாமல், “உங்களைத் தடுத்து வைக்க வேண்டும்; மேலிடத்திலிருந்து உத்தரவு” என்று மட்டுமே காவலர்கள் கூறியதாக அவர் காணொளியில் தெரிவித்தார். காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவர்கள் வற்புறுத்தினர்.

தாம் இறங்க மறுத்ததால் சாலையிலேயே சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 25க்கும் மேற்பட்ட காவலர்கள் காரைச் சூழ்ந்திருந்ததாகவும், அவருடன் மேலும் மூன்று வழக்கறிஞர்களும் பிடிக்கப்பட்டதாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அவர் தில்லி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரம்: ஏஎன்ஐ, சவுத் ஃபர்ஸ்ட்

ஹார்வர்டில் படித்துத் திரும்பிய கொள்கைப் பிரிவுத் தலைவர் மெஹர் கைது

சிஜேபியின் கொள்கைப் பிரிவுத் தலைவரான மெஹர், தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். காரணம் கேட்டபோது, “சட்டம்–ஒழுங்கு நிலைமை” என்று மட்டுமே பதில் கிடைத்ததாக அவர் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளார். காணொளி எடுப்பதை நிறுத்துமாறு காவலர்கள் அவரை வற்புறுத்துவதும் அதில் பதிவாகியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, சொந்த நாட்டுக்குச் சேவை செய்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பியவர் அவர் என்று சிஜேபி குறிப்பிட்டுள்ளது. “இந்தியாவின் இளைஞர்களை இப்படி நடத்துவது முறையல்ல; உங்கள் சர்வாதிகாரத்துக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல” என்று பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு அக்கட்சி பதிவிட்டது. தலைமை, சட்டப் பிரிவு, கொள்கைப் பிரிவு என அமைப்பின் அனைத்து மட்டப் பொறுப்பாளர்களும் ஒரே நாளில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.ஆதாரம்: சிஜேபி எக்ஸ் பக்கம், சவுத் ஃபர்ஸ்ட்

“தலைவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போராட்டம் தொடரும்”: சிஜேபி

தாம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்து, அபிஜீத் திப்கே முந்தைய நாள் இரவே ஒரு காணொளியைப் பதிவு செய்து வைத்திருந்தார். “இதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், நாங்கள் மூவரும் கைதாகிவிட்டோம் என்று பொருள்; இனி இயக்கத்தை அஜிங்க்யா வழிநடத்துவார்” என்று அதில் அவர் கூறியுள்ளார். அதன்படி, அமைப்புப் பொறுப்பாளர் அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்துக்குத் தலைமை ஏற்பார் என சிஜேபி அறிவித்தது.

அரசு பெருந்திரள் கைதுகளால் எதிர்ப்பை மௌனமாக்க முயலும்போது, ஜனநாயகத்தைக் காக்க மக்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் செய்திக் குறிப்பு கூறுகிறது. மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனும் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இணையம் துண்டிக்கப்பட்டதால் எந்தத் தகவலும் கிடைக்காமல் தவிப்பதாக அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒருவர் ‘சவுத் ஃபர்ஸ்ட்’டிடம் தெரிவித்தார்.ஆதாரம்: சவுத் ஃபர்ஸ்ட், சிஜேபி செய்திக் குறிப்பு, தி ஸ்டேட்ஸ்மேன்

பேருந்து நிறுத்தத்தில் தர்ணா செய்த மம்தா பானர்ஜி கைது

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தில்லி சவுத் அவென்யூ பேருந்து நிறுத்தம் அருகே தர்ணாவில் அமர்ந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர்கள் சாகேத் கோகலே, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 5 பேர் தில்லி காவல்துறையாலும் மத்திய ரிசர்வ் காவல் படையாலும் கைதிகளை ஏற்றும் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். தெரியாத இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக கோகலே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

முழக்கம் எழுப்பக் கூடாது, பதாகை பிடிக்கக் கூடாது என்று காவலர்கள் உத்தரவிட்டதாகவும், பின்னர் தலைவரையும் எம்.பி.க்களையும் சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. “நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நடக்கிறது” என்று மம்தா கூறியதாகவும், “மோடி அவர்களே, எதைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?” என்றும் அக்கட்சி பதிவிட்டது.

ஆதாரம்: தி ஸ்டேட்ஸ்மேன், சவுத் ஃபர்ஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கம்

“நெருக்கடி நிலையை விட மோசம்”: அரவிந்த் கெஜ்ரிவால் கைது

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டதாகப் பிடிஐ செய்தி நிறுவனம் காணொளியுடன் தெரிவித்துள்ளது. முன்னதாகவே அவரது இல்லத்துக்கு வெளியே பெருமளவில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சி கூறியிருந்தது.ஆதாரம்: பிடிஐ (சவுத் ஃபர்ஸ்ட் மேற்கோள்), ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் பக்கம்

பினராயி விஜயனை வாகனத்திலேயே 2:15 மணி நேரம் அலைக்கழித்த காவல்துறை

தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர், இளைஞர்களுடன் பங்கேற்பதைத் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் கே.என்.பாலகோபால் எம்.எல்.ஏ உள்ளிட்டோரை கைது செய்த தில்லி காவல்துறை ஒன்றரை மணிநேரப் பயணத்திற்குப் பின்பு சதர்சால் ஸ்டூடியோவிற்கு கொண்டு சென்றது. அவர்களை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் வாகனத்திலேயே மீண்டும் 45 நிமிடத்திற்கு மேலாகத் தில்லி முழுவதும் சுற்ற வைத்து காவல்துறை அலைக்கழித்துள்ளது.

இதுதொடர்பாகக் காவல்துறை வாகனத்திலேயே ஜான் பிரிட்டாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள வீடியோவில், “நாங்கள் (பினராயி விஜயன், ஜான் பிரிட்டாஸ், கே.என்.பாலகோபால்) சத்தர்சால் ஸ்டூடியோவில் இருந்தோம். அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் (45 நிமிடம்) வரை எங்களை அங்கே இருக்கச் சொன்ன பிறகு,

மீண்டும் எங்களை காவல்துறை ஜீப்பில் ஏற்றித் தில்லி முழுவதும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஒன்றரை மணி நேரம் இதுபோலவேதான் தில்லி நகருக்குள் எங்களைச்சுற்றிக் காட்டிய பிறகுதான் சதர்சால் ஸ்டூடியோவிற்கு கொண்டு வந்தார்கள். அங்கிருந்து மீண்டும் இந்தக் காவல்துறை ஜீப்பில் ஏற்றி எங்களை எங்கு கொண்டு போகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்தியாவின் மிகவும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பினராயி விஜயன், 10 ஆண்டுகள் கேரளத்தின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு பொலேரோ காரில்(மஹிந்திரா நிறுவன தயாரிப்பு) அவரை அமரவைத்து, எங்கே போகிறோம் என்று கூடச் சொல்லாமல், இப்படி கடந்த சிலமணி நேரங்களாக எங்களை இப்படித் தில்லி நகரத்தில் சுற்ற வைத்துக் கொண்டிருக்கிறது தில்லி காவல்துறை” என அவர் குற்றம்சாட்டினார்.