தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“அன்று காந்தியைக் கொன்றார்கள்; இன்று ஜனநாயகத்தைக் கொல்கிறார்கள்”

2 Oct 2026, 9:49 pm
“அன்று காந்தியைக் கொன்றார்கள்; இன்று ஜனநாயகத்தைக் கொல்கிறார்கள்”

“அன்று காந்தியைக் கொன்றார்கள்; இன்று ஜனநாயகத்தைக் கொல்கிறார்கள்”

புதுதில்லிதில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமையன்று இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) தலைமையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கைக்கு எதிராகப் பேரணியுடன் கூடிய போராட்டம் நடைபெற இருந்தது. ஆனால், ஒன்றிய உள்துறைஅமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தில்லி காவல்துறை இந்தப் போராட்டத்திற்குத் தடை விதித்திருந்தது. எனினும், தடையை மீறி ஜந்தர் மந்தர் நோக்கி நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், தடையை மீறிப் பேரணி மற்றும் போராட்டம் நடத்தியதாகக் கூறி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், டிஒய்எப்ஐ பொதுச்செயலாளர் ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா, தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஏ. ரஹீம், எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, எஸ்எப்ஐ இணைச் செயலாளரும் ஜே.என்.யு.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான ஐஷி கோஷ் உள்ளிட்ட பல தலைவர்களைத் தில்லி காவல்துறை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றது.

ஞானேஷ் குமார் ஜனநாயகத்தின் கசாப்புக்காரர்

காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது எம்.ஏ. பேபி கூறுகையில், “வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடினோம். ஆனால், தில்லி ஜந்தர் மந்தர் அருகே திறமைமிக்க இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தோழர் பிருந்தா காரத் போன்ற மூத்த தலைவர்கள் எனஅனைவரும் கைது செய்யப்பட்டுள் ளோம். இந்த நடவடிக்கை ஏன்?ஞானேஷ் குமார் தனது கட்சியான பாஜக தேர்தலில் வெற்றி பெற உதவ வேண்டும் என்பதற்காக, சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கி வருகிறார். எனவே, ஒரு வகையில் அவர் ஜனநாயகத்தின் கசாப்புக்காரராகவே (பலியிடுபவர்) பார்க்கப்படுகிறார். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கத்தினர் கைது நடவடிக்கையை மட்டும் மேற்கொள்கின்றனர். இதுவே இந்த நாட்டின் அவலநிலையாகும். வெற்றி கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்; ஞானேஷ் குமாரே ராஜினாமா செய்!”என்று அவர் முழக்கமிட்டார்.

மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் கொல்கிறார்கள்

அதேபோல, சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், “காந்தியைப் படுகொலை செய்தவர் களின் அதே கொள்கையைக் கொண்டவர்கள்தான் இன்று மத்திய ஆட்சியில்அமர்ந்திருக்கிறார்கள். அன்று காந்தியைக் கொன்றார்கள்; இன்றோ மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் கொல்கிறார்கள்; வாக்குகளைத் திருடுகிறார்கள்; நமது நாட்டின் குடிமக்களான 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறார்கள்.ஞானேஷ் குமாரே ராஜினாமா செய்! 2023-இல் மோடி அரசு தேர்தல் ஆணையத்தை ‘பாஜக ஆணைய மாக’ மாற்றிய அந்தச் சட்டத்தை ரத்து செய்! எஸ்.ஐ.ஆர் நடைமுறையைஉடனடியாகத் திரும்பப் பெறு!” என முழக்கங்களை எழுப்பினார்.மேலும் அவர் கூறுகையில், “நீக்கப்பட்ட அனைத்து வாக்குகளையும் மீண்டும் சேர்க்கும் உரிமையை நாம் பெற்றே தீருவோம். இன்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன. ஏனெனில், இன்று தில்லியின் ஒவ்வொரு முடுக்கமும், காவல்துறை யின் ஒவ்வொரு பேருந்தும் ஜந்தர் மந்தராக மாறியுள்ளது. போராட்டம் வெல்லட்டும்! ஒற்றுமை வெல்லட்டும்!” என்றார்.

போராட்டம் தீவிரமடையும்

எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா கூறுகையில், “நமது நாட்டின் ஜனநாயகப் பண்பு களுக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் துரோகம் இழைத்த ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி போராடியதற்காக நூற்றுக்கணக்கான தோழர்களைத் தில்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது. துரோகி ஞானேஷ் குமார் பதவியைவிட்டு வெளியேற வேண்டும். ஞானேஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்காவிட்டால், இன்று வெடித்துள்ள இந்தக் குரலும் போராட்ட இயக்கமும் மேலும் தீவிரமடைந்து நாடு முழுவதும் வேகமாகப் பரவும். நாங்கள் இந்தப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்; இந்த நாட்டைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக்காப்பாற்ற, அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற இந்தப் போராட்டத்தை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்”என்று அவர் உறுதியாகத் கூறினார்.

ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் பங்கேற்பு

தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி எஸ்.எப்.ஐ மற்றும் டி.ஒய்.எப்.ஐ தலைமையில் நடைபெற்ற பேரணியில் (மற்ற ஜந்தர் மந்தர் நுழைவுவாயில்) ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளும், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிஷி, ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ் ஜா ஆகியோர் நூற்றுக்கணக்கானோர்களுடன் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் வரும் வழியிலேயே தில்லி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அதே போல ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சவுரப் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா, அனுராக் தண்டா, சஞ்சய் சிங் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்களை

தில்லி காவல்துறையினர் தடுத்து வைக்கப்ட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.