தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 Oct 2026, 10:52 pm

ஆம் ஆத்மி கட்சி

தேர்தல் முறைகேடு, வாக்குத் திருட்டு மூலமாகவே வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும்; இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்கி, வாக்குத் திருட்டு மோசடியைப் பாதுகாப்பதிலேயே அவர் தீவிரமாக முனைப்புடன் இருக்கிறார். ஞானேஷ் பதவி விலக வேண்டும்; அதே போல மோடியும் பதவி விலக வேண்டும்.

பெல்ஜியம் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ்

போராடுவதற்கான உரிமை ; ஒன்றுகூடுவதற்கான உரிமை ; நமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை ; வாக்களிப்பதற்கான உரிமை நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாத்து வருகிறோம். இவை அனைத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க எந்த நிலைக்கும் செல்வோம். அதனால் தில்லி போராட்டத்தில் இணைந்துள்ளேன்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 40 ஆண்டுகளில், தில்லி இதுபோன்று முடங்கிப்போனதை நான் எப்போதுமே கண்டதில்லை. மோடி அரசு பதற்றத்தில் உள்ளது.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி

45 மெட்ரோ நிலையங்களை மூடியும், 250க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 25,000 பாதுகாப்புப் பணியா ளர்களைக் குவித்தும், அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலைப் போல தில்லியை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.