முந்தய பக்கம்

பாரதியார் படிப்பகத்தைசீரமைக்க கோரிக்கை

11 Oct 2026, 1:28 am
பாரதியார் படிப்பகத்தைசீரமைக்க கோரிக்கை

பாரதியார் படிப்பகத்தைசீரமைக்க கோரிக்கை

திருவண்ணாமலை,அக் 10-திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமசாமி அவர்களால் வளையாம்பட்டு சாலையில் அமைக்கப்பட்ட படிப்பகமாக பாரதியார் படிப்பகம் திகழ்ந்து வந்தது.

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் மகாகவி பாரதியாரின் பெயரால் இந்தப் படிப்பகம் தொடங்கப்பட்டது. அன்று முதல் பல தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான பட்டதாரிகளையும், அரசு அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமை இந்தப் படிப்பகத்திற்கு உண்டு.

தற்போது பாழடைந்து கிடக்கும் இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செங்கம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கல்வியறிவை வளர்க்கும் இத்தகைய படிப்பகங்கள் கிராமப்புற மாணவர்களுக்குப் பேரூதவியாக இருக்கும் என்பதால், சிதிலமடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு அல்லது முழுமையாகச் சீரமைத்து, நவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகமாக மாற்ற வேண்டும் என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram