வாரம் ஒரு முறை குழந்தைகளை குளிப்பாட்டும் அவலம்
4 Oct 2026, 2:05 am
<p><strong>வாரம் ஒரு முறை குழந்தைகளை குளிப்பாட்டும் அவலம்</strong></p><p>தாராபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்று அவல நிலையில், வாக்கு கேட்டுபோகும்போது, ஒரு பெண் கூறும்போது, ரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது என்பதால், பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் எங்கள் குழந்தைகளை தினமும் குளிப்பாட்டக் கூட முடியவில்லை. ஒரு வாரம், பத்து நாளைக்கு ஒருமுறை குளிக்க வைக்கும் நிலை உள்ளது என்று கூறினார். இதுதான் தாராபுரம் நிலை. இத்தனை ஆண்டு காலமாக ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சியும் இப்போது வந்து வாக்குறுதி கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று கூறுவது யாரை ஏமாற்ற? என்றார்.</p>
