சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
12 hours before

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.19-தருமபுரி ஏஎஸ்டிசி நகர் குடியிருப்புக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட ஏஎஸ்டிசி நகர் குடியிருப்பு, டிஎன்வி நகர், ஆவின் நகர் மற்றும் நந்தி நகர் ஆகியவை ஒரே பகுதியில் உள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்கள், பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சிறு வியபாரிகள் என பல்வேறுபிரிவினர்வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்ல இரண்டு பிரதான சாலைகள் உள்ளன. இவை இரண்டுமே பல்வேறு அரசு திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்டுள்ளன. பணிகள் முடிந்த பின்னர் சாலையை முறையாக போடவில்லை.

இச்சாலை பிடமனேரியையும் இணைக்கிறது. தற்போது இச்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியாக மாறிவிடுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பள்ளி செல்ல தாமதம் ஏற்படுகிறது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைவதுடன், பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமாக மிகவும் பழுதடைந்துள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.