தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேருந்து நிலைய பராமரிப்பை கைவிட்ட நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி: சிபிஎம் நேரில் ஆய்வு

2 hours before
பேருந்து நிலைய பராமரிப்பை கைவிட்ட நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி: சிபிஎம் நேரில் ஆய்வு

பேருந்து நிலைய பராமரிப்பை கைவிட்ட நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி: சிபிஎம் நேரில் ஆய்வு

தருமபுரி, அக்.2-தருமபுரி பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தினமும்ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.தருமபுரி நகரின் மையப்பகுதியில் 5.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பி.ஆர்.ராஜகோபால் பேருந்துநிலையம், நகராட்சி சார்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்துவைக்கப்பட்டது. இதனிடையே, நகர நெரிசலை குறைக்க ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

ஆனால், தொலைதூரப் பகுதிக்கு செல்ல நேரிட்டதால், தருமபுரி மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை மீண்டும் ராஜகோபால் பேருந்து நிலையத்திற்கே மாற்றக் கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையேற்று, தற்போது திருப்பத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் மீண்டும் ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டப் பகுதிகளை இணைக்கும் பிரதான மையமாக இப்பேருந்து நிலையம் திகழ்ந்தாலும், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. வளாகத்தில் உள்ள ஒரே உயர் மின்கோபுரவிளக்கு பழுதடைந்து கிடப்பதால், இரவு நேரங்களில் பெரும்பாலான பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. ஏற்கெனவே சங்கிலிப்பறிப்பு சம்பவங்களும் அசம்பாவிதங்களும் நடைபெற்றுள்ள சூழலில், வெளிச்சமின்மை பயணிகளிடையே, குறிப்பாகப் பெண்களுக்குபெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் அமர போதிய இருக்கைகள் இல்லாததால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் தரையில் அமரும் அவலநிலை நிலவுகிறது. கடைகளின் வராண்டா பகுதியில் மேற்கூரைகள் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதுடன், தரையிலும் குழிகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இலவச கழிப்பறையில் தண்ணீர் வசதியின்றி கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வுஇந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஜெயா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரைஸாமேரி, சிஐடியு மாவட்டதுணைச்செயலாளர் எஸ்.ராஜம்மாள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்து நிலையத்

தில் உள்ள வியாபாரிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பராமரிப்பின்றி காணப்படும் இலவச கழிப்பறை, பழுதடைந்த மேற்கூரை உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.தருமபுரி நகரப் பேருந்து நிலையம் மற்றும் ராஜகோபால் புறநகர் பேருந்து நிலையம் வழியாக தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், தருமபுரிநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பேருந்து நிலையங்களைநேரில் ஆய்வு செய்து, மின்விளக்குகள், பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைத்து, தொடர்ந்து முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி நகரக்குழு வலியுறுத்தியுள்ளது.-ஜி.லெனின்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.