தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துருவ் ராத்தியை சிறையில் அடைக்க மோடி அரசு சதி

yesterday
துருவ் ராத்தியை சிறையில்  அடைக்க மோடி அரசு சதி

துருவ் ராத்தியை சிறையில் அடைக்க மோடி அரசு சதி

2018ஆம் ஆண்டு ‘பாஜக ஐடி செல்பாகம் II’ என்ற தலைப்பில் துருவ்ராத்தி ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மோடி அரசின் ‘காட்டாட்சியை’ சுக்கு நூறாக நொறுக்கினார். தொடர்ந்து மோடி அரசின்ஒவ்வொரு ஊழல், மதவெறிப் பேச்சு, மணிப்பூர்வன்முறை என அனைத்தையும் ஆதாரத்தோடு தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பிய துருவ்ராத்தி எஸ்ஐஆர் போராட்டங்களில் பங்கேற்று, பாஜக - மோடி அரசுக்கு எதிராக உரையாற்றினார்.இந்நிலையில், துருவ் ராத்தியின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒன்றிய பாஜக அரசு,ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வழக்கறிஞரான விகாஸ் பாண்டே என்பவர் மூலம் புகார் அளித்து துருவ்ராத்தி மீது வழக்குப் பதிவு செய்தது. 2018ஆம் ஆண்டு பேசியதை அடிப்படையாகக் கொண்டு தில்லி காவல்துறை அவதூறு வழக்காக பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு தில்லிநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. முதல் வகுப்பு நீதித்துறை நீதிபதி அனாம் ராயிஸ் கான் அமர்வு முன்பு விகாஸ் பாண்டேதரப்பு வழக்கறிஞர்,”துருவ் ராத்திபொதுவாக வெளிநாட்டில் வசிப்பதால், இந்த வழக்கு தொடர்பாக சம்மன்களை அனுப்பும் முயற்சிகள் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வருகின்றன. வழக்கை விரைந்து விசாரிக்க முடியவில்லை. ராத்தி தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் புதிய சம்மன்அனுப்ப வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி,”இந்த வழக்குத் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் நீதித்துறை நடுவர்ராகுல் ஜெயின் பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட்டுகளைப் பிறப்பித்

திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவுபிறப்பிக்கப்படுகிறது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு மீண்டும் பட்டியலிடப்படும். இந்த வழக்கை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதி விடுப்பில் இருப்பதால், நான் இந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். இருப்பினும், இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் மூலம், அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டதாக அர்த்தமல்ல” என உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.