இலவச வீட்டுமனை, வீடு தேடி ரேசன் வழங்கிடுக
1 hour before

இலவச வீட்டுமனை, வீடு தேடி ரேசன் வழங்கிடுக

நாமக்கல், ஜூலை 31.மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்,வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியரிடம் நூற்றுக்கணக்கான மனுக்கள் அளிக்கப்பட்டன.குமாரபாளையம் தாலுகா குழு தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின்நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டப் பொருளாளர் கே.அருண்குமார் மற்றும் தாலுகா குழுநிர்வாகிகள் சிபிஎம் குமாரபாளையம் நகரச் செயலாளர் கந்தசாமி மற்றும்கிளை நிர்வாகிகள் உட்பட 155-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலவச வீட்டுமனை,வீடு கட்டுதல், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் கோரி மொத்தம் 248 மனுக்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுப்தப்பட்டது.

சேலம்

இதேபோன்று, சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கடந்த2023 ஆம் ஆண்டு மேட்டூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது மனு மீது விசாரணை செய்து20 மாற்றுத்திறனாளி பயனாளிகளை தேர்வு செய்தனர். அதன்பின்பு வெவ்வேறுகாரணங்களைசொல்லி மேட்டூர் வட்டாட்சியர், வரு

வாய் ஆய்வாளர் கிராம நிர்வாகஅலுவலர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சொல்லி தெரிவித்துள்ளனர். பிறகு, மீண்டும் மேட்டூர் வட்டாட்சியரை சந்திக்கச்சொல்லிதெரிவிப்பது, இப்படி பலமுறை மாற்றுத்திறனாளிகளை அலையவிடுவதை கண்டித்து வெள்ளி

யன்று மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட

னர்.இப்போராட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியத் தலைவர் சுமதிதலைமை ஏற்றார். இதில் மாவட்டச்

செயலாளர் எம் குணசேகரன், மாவட்டப் பொருளாளர் ஜான் பெர்னாண்டஸ், மேட்டூர் தாலுகா தலை

வர் பவுல்ராஜ், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.