தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய தேர்வு முகமையைக் கலைப்பதே தீர்வு!

26 Jul 2026, 10:17 pm
தேசிய தேர்வு முகமையைக் கலைப்பதே தீர்வு!

தேசிய தேர்வு முகமையைக் கலைப்பதே தீர்வு!

கல்வியைக் காக்க நடைபெற்ற மாணவர்- இளைஞர் எழுச்சியின் விளைவாக, கல்வித்து றை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேறு வழி யின்றி தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார். இருப்பினும், இது அமைச்சரின் பதவி விலகுவதோடு நின்றுவிடக்கூடிய சாதாரணப் பிரச்சனை அல்ல; மாறாக, நாட்டின் கோடிக்கண க்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறை யாடி வரும் தேசிய தேர்வு முகமையின் (NTA) அடிப்படையான கட்டமைப்புச் சீர்கேடுகளும், தொடரும் குளறுபடிகளுமே இதன் மூலவே ராகும். அமைச்சரின் வெளியேற்றம் என்பது மோடி அரசின் தோல்வியை ஒப்புக் கொள்வ தும், பொறுப்பேற்பதுமே ஆகும். ஆனால் மோடி அரசு அப்படிக் கூட சொல்லிக்கொள்ளவில்லை. பிரதானுக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

அது ஒருபுறம் இருக்க, மாநிலங்களவையில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. சிவ தாசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய தேர்வு முகமையிடம் சொந்தமாக ஒரு நிரந்தர ஊழியர் கூட இல்லை என்ற அதிர்ச்சிகர மான உண்மை அம்பலமாகியுள்ளது. 2018 முதல் 6.6 கோடி மாணவர்களுக்காக 270 தேர்வுகளை நடத்திய இந்த அமைப்பு, வெறும் 24 பதிலி ஊழி யர்களைக் கொண்டே இயங்குகிறது; 73 பேர் மட்டுமே வெளிமுகமை மூலம் நியமிக்கப் பட்டுள்ளனர். எந்தவித நிர்வாகக் கட்டமை ப்பும் இன்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சூதாடும் இந்த அமைப்பு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.

நிதிக்கணக்கீடுகளிலும் அரசு பச்சையான ஒளிவுமறைவு அரசியலில் ஈடுபட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் மூலம் 2018-19 இல் 504.16 கோடி யாக இருந்த இந்த முகமையின் வருவாய், 2023-24 இல் 1,116.84 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறிய அரசு, 2024-26 ஆண்டுகளுக்கான வரு வாயை வெளியிட மறுத்துவிட்டது. மேலும், முந்தைய தரவுகளுடன் தற்போது வழங்கப்பட்ட தரவுகள் பெருமளவில் முரண்படுகின்றன. 2019-20 இல் 50.19 கோடி ரூபாயும், 2020-21 இல் 8.31 கோடி ரூபாயும் கணக்கில் முரண்பாடு உள்ளது. இம்முகமை தொடங்கியதிலிருந்து சுமார் 100 வினாத்தாள் கசிவுகள் மற்றும் 50-க்கும் மேற் பட்ட மறுதேர்வுகள் நடந்துள்ள போதிலும், உண் மைகளை மூடிமறைக்க அரசு முற்படுகிறது.

நீட் முதல் நெட் வரை அனைத்துத் தேர்வு களையும் நாசமாக்கிய இந்த முறைகேடுகளால் 22 மாணவர்கள் உயிரை இழந்துள்ளனர். எனவே அமைச்சரின் ராஜினாமாவுடன் நின்று விடாமல், என்டிஏ எனும் தேசிய தேர்வு முக மையை முற்றிலும் கலைப்பதும், மாணவர்களை வஞ்சிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெறுவதுமே உண்மையான ஜன நாயக நீதியைப் பெற்றுத் தரும்.

ஒட்டுமொத்த கல்வித்துறையையும் சீரழித்து வரும் இந்த அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் கார்ப்பரேட் மற்றும் காவி சக்திகளின் சதித்திட்டங்களை இளைய சமுதாயம் தொடர்ந்து முறியடிக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.