திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!
yesterday
<p>நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற அரசு டெண்டர் ஒதுக்கீடுகளில் ரூ.1,020 கோடி முறைகேடு மற்றும் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p>
