வாலாஜா மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
2 hours before
<p>வாலாஜா மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு</p><p>ராணிப்பேட்டை, ஜூலை 31- வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மாணவிகள் உறுதியேற்க வேண்டும் என்று ஆட்சியர் வலியுறுத்தினார். தொடர்ந்து, டாக்டர் வெங்கடேஷ் பாபு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த ஆடியோ, வீடியோ காட்சிகளைத் திரையிட்டுக் காட்டினார். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பெரியசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
