மீஞ்சூரில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்
2 hours before

மீஞ்சூரில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்

திருவள்ளூர், செப்.27-திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் ஞாயிறன்று (செப்.27) நடைபெற்றது.

வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் ஆர்.அகிலன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை மாநிலதுணைத்தலைவர் ஆர்.அபிராமி தொடங்கி வைத்தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் டி.மதன், மாவட்டசெயலாளர் வி.வினாயகமூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, பி.கதிர்வேல், இ.ஜெயவேல், சிபிஎம்ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சஞ்சய்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பொன்னேரி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்த இம்முகாமில்ஏராளமான இளைஞர்கள் குருதி கொடையளித்தனர். முன்னதாக மீஞ்சூர் பகுதி செயலாளர் இ.கார்த்திக் வரவேற்க,சுகதேவ் நன்றி கூறினார்.